300. | கயிலை மால்வரை நீங்கிக் கனிவினால் மயிலை மால்வரை வந்துதித் தோங்கியே. | (33) |
| | |
301. | ஆன நாம மவனியு ளோர்சிவ ஞான தேசிக னென்றேத்த நண்ணியே. | (34) |
| சிவஞான தேசிகர் பிள்ளைப்பருவ விளையாட்டு |
302. | அலையெ டுத்த வுலகி னருந்தவம் தலையெ டுப்பத் தலையெடுத் துந்தியே. | (35) |
| | |
303. | ஒழுக்க முற்று முலகந் தவழ்ந்திட விழுப்ப முற்றுத் தவழ்ந்து விளங்கியே. | (36) |
| | |
304. | வேத நன்னடை மேம்பட மேம்படு போத நன்னடை போற்றி நடந்தரோ. | (37) |
| | |
305. | விச்சை யல்லது வேறொன்றின் மேலெமக் கிச்சை யில்லென் றிருகா தலைத்தரோ. | (38) |
| | |
306. | மூட நீதி முழங்குஞ் சமையப்புள் ஓட வம்போ ருகக்கரங் கொட்டியே. | (39) |
| ஞானக்கோலம் கொள்ளல் | |
307. | தலைம யங்கிய தத்துவ ஞானநூல் நிலைபெ றும்படி யாய்ந்து நிலவியே. | (40) |
| | |
308. | பிறவி நீள்பகை பேர்ப்பா ரிவரென அறையு ஞான வருட்கழல் வீக்கியே. | (41) |
| | |
309. | அற்ற நீக்கி யபிமான மென்பவை செற்ற ஞானத் திருவுடை சாத்தியே. | (42) |
| | |
310. | இதர நூனெறி யேகாமெய்ஞ் ஞானமாம் உதர பந்த முவப்பொடு சேர்த்தியே. | (43) |
| | |
311. | கோதி னஞ்ஞ னுயிரைக் குடிப்பதோர் தீதின் ஞான வுடைவாள் செருகியே. | (44) |
302. அலை - அல்லை ; அஞ்ஞானத்தை.
307. நிலவி - நின்று.
308. “பிறவிப் பகைவெல்வார் பிறிதற் றொருதானா, அறிவுற் றவ ரென்றே யறையுங் கழலிட்டே” அஞ்ஞவதைப்.
311. ஞானவாள் : “என்னவிரோத ஞானச் சுடர் வடிவாள்” கந்தரலங்காரம்.