312. | கமல யோனி கருத்துங் கடந்ததோர் விமல ஞான வியன்முடி சூடியே. | (45) |
| | |
313. | ஈன வஞ்ஞ னெனும்பாசன் பட்டிட ஞான பட்டந்த னன்னுதற் கட்டியே. | (46) |
| |
314. | ஊன வஞ்ஞ னுறும்பழி கேட்கிலா ஞான குண்டல நன்கா தணிந்தரோ. | (47) |
| | |
315. | வளரு மஞ்ஞன் மடியத் திருப்புயம் கிளரு ஞானவண் கேயூரந் தாங்கியே. | (48) |
| | |
316. | தூய ஞான சுகானந்த முத்திரை ஆய வாழி யணிவிரல் சேர்த்தியே. | (49) |
| | |
317. | எங்கு மாமண மேறமெய்ஞ் ஞானவண் குங்கு மாதி குளிர்சாந்து பூசியே. | (50) |
| | |
318. | குணம றாது குலவுமெய்ஞ் ஞானமாம் மணம றாத மலர்மாலை சாத்தியே. | (51) |
| | |
319. | கூரு மஞ்ஞன் குலையமெய்ஞ் ஞானமாம் வீர சங்கிலி பூண்டு விரும்பியே. | (52) |
| | |
320. | ஆசி லாத வருள்பொழி ஞானமாம் மாசி வார மணிவடந் தாங்கியே. | (53) |
| | |
321. | சங்க மற்ற சதானந்த வாரிதிச் சங்க மெங்குந் தழங்கித் தழையவே. | (54) |
| | |
322. | பகரி னெங்கும் பரந்தொடுங் காததாம் நிகரின் ஞானக் கவிகை நிழற்றவே. | (55) |
| | |
323. | முதிரு ஞானமுந் நீர்த்திரை யாகிய எதிரில் வெண்சா மரைக ளிரட்டவே. | (56) |
| | |
324. | இணக்க மற்ற வியன்ஞான மாகிய பிணக்க மற்ற பதாகை பிறங்கவே. | (57) |
| | |
325. | தூய ஞான சுதர்சனச் சக்கிரம் மாய வஞ்ஞன் மறுகச் சுழலவே. | (58) |
312. கமலயோனி - பிரமன்.
313. கேயூரம் - வாகுவலயம்.
316. ஆழி - மோதிரம்.
324. பதாகை - பெருங் கொடி.