பக்கம் எண் :

8. கூளி கூறியது 53

 

படைகள்

 
326.

கடக்க லாதசங் கற்பங் கடந்ததென்
படைக்கை சான்ற பதாகினி சூழவே.

(59)
   

327.

தடையொன் றின்றிச் சலியா வியன்பொறை
நடையொன் றின்மணி நற்றேர் மலியவே.

(60)
  

328.

தேசு மேவு செயறீர் குரகதம்
மாசி லாது மருங்குற மன்னவே.

(61)
   

329.

அவாவின் மூரி யசல மெனுமர
சுவாவின் மாட்சி யுலகம் வியப்பவே.

(62)
 

சிவஞான தேசிகர் சுகாசனத் தேறல்

 

330.

ஏறு புள்ளன மென்பவை யாதியா
ஏறு மூர்திக ளெல்லா மிரங்கவே.

(63)
   

331.

வெறுத்த செய்தி விரகில்வெங் காலனைக்
கறுத்த பாத கமலஞ் சிவப்பவே.

(64)
   

332.

உய்தி யெய்த வுலக முழுவதும்
செய்த புண்ணிய மெல்லாந் தெரியவே.

(65)
 

 

 

333.

அரணி லஞ்ஞ னவனையொன் றாவுன்னித்
தரணி தோயத்தன் றாமரைத் தாள்களே.

(66)
   

334.

இடரு ழந்தங் கிமையவர் தேடவிங்
கடர்செய் தெங்கு மடியவர் போற்றவே.

(67)
   

335.

வேதங் காணரு மேதக்க வன்செயல்
ஓது மாறெவ னென்றுல கோதவே.

(68)
   

336.

எந்தை யெம்பிரா னெங்குரு நாயகன்
வந்து பூமிசை மானிடர் வாழவே.

(69)
   

337.

இன்ன வண்ண மிகன்ஞான கேசரி
துன்னு யோக சுகாசனத் தேறியே.

(70)

326. என் - என்று சொல்லப்படுகின்ற. பதாகினி - கொடிப் படை.

328. தேசுமேவு குரகதம், செயல்தீர் குரகதம்.

பி - ம். ‘செயிர்தீர் குரகதம்’

329. பி - ம். ‘உலக மதிப்பவே’

333. “உம்ப ரானவர்க் கரிய தாணுவிவ் வுணர்வி லானையொன் றாக வுன்னியே, தம்பி ரானருட் கருணை யாலையன் தானும் வந்தனன் றரணி தன்னிலே” அஞ்ஞவதைப்.