பக்கம் எண் :

8. கூளி கூறியது 95

 

அஞ்ஞன் படைகள் ஞானம் பெறுதல்

 

628.

உழந்தமன்ம தாதிசேனை யொன்றுமில்ல வாகியே
இழந்துஞான ரூபமாகி யேகமா யிலங்குமே.

(361)
 

வேறு

629.

பிறப்பி றப்பொடு பிணங்கினரே
பிறப்பி றப்பொடு பிணங்கினரே.

(362)
  

630.

வரவொடு போக்கிடை மாண்டனரே
வரவொடு போக்கிடை மாண்டனரே.

(363)
   

631.

ஒளிக்கு முளத்தவ ராயினரே
ஒளிக்கு முளத்தவ ராயினரே.

(364)
   

632.

அருவினை யீட்ட மகன்றனரே
அருவினை யீட்ட மகன்றனரே.

(365)
  

633.

உணர்வுண ராமை யொழிந்தனரே
உணர்வுண ராமை யொழிந்தனரே.

(366)
  

634.

ஒன்றறி யாமை யுதித்தனரே
ஒன்றறி யாமை யுதித்தனரே.

(367)
  

635.

நினைப்பு மறப்பொடு நின்றவரே
நினைப்பு மறப்பொடு நின்றவரே.

(368)
  

636.

பொறிவழி யேமனம் போனவரே
பொறிவழி யேமனம் போனவரே.

(369)
  

637.

வெய்ய பவப்பகை வென்றவரே
வெய்ய பவப்பகை வென்றவரே.

(370)

629. பிறப்பினாலும் இறப்பினாலும் துன்புற்றவர், பிறப்போடும் இறப்போடும் பகைத்தனர்; பிறப்பிறப் பிலராயினா ரென்றபடி.

630. மாண்டனர் - மாட்சியையுற்றவர், இறந்தனர்.

631. தம்மை ஒளித்த உள்ளத்தையுடையவர் தானே ஒளிந்த உள்ளத்தரானார்; மனம் அற்ற தென்றபடி. “கரக்கு முளத்தவ ராயினரே, கரக்கு முளத்தவ ராயினரே” அஞ்ஞ.

632. அகன்றனர் - அகற்சியையுடையராயினவர், நீங்கினார்.

635. நினைப்பு மறப்பு என்பவற்றோடு இருந்தவர் நினைப்பையே மறந்தனர்.

636. பொறிகளின் வழியே மனம் போனவர்கள், பொறிகளும் அவற்றோடு மனமும் ஒருங்கே போகப் பெற்றனர்.

637. வென்றவர் - வெல்லப்பட்டவர், வெற்றிபெற்றவர்.