பக்கம் எண் :

96 பாசவதைப் பரணி

 

வேறு

 

638.

கல்லிய தும்மக மாயையே
      காதரந் தீர்த்தருள் காதலார்
சொல்லிய தும்மொரு வார்த்தையே
      தொல்லுல கும்மொரு வார்த்தையே.

(371)
   

639.

உய்த்தரு ளுந்தினைப் போதிலே
      உணர்வுரு வாகநம் முச்சிமேல்
வைத்தரு ளும்மிரு போதுமே
      வாழத்துவ தும்மிரு போதுமே.

(372)
 

ஞானவினோதன் படை மீளுதல்

 
 

வேறு

 

640.

உளவி லானுயிர்க் குறுதி செய்தபின்
      உணர்வி னாதனை யுற்று வாழ்தரும்
அளவி லாவரும் படையை மீள்கென
      அரிய சேனையுந் திரிய மீளுமே.

(373)
 

கண்டோர் ஞானவினோதனைப் புகழ்தல்

 

641.

அங்க மாதிசேர் வஞ்ச மாபுரத்
      தாண டங்கலு மடுதல் கண்டுளோர்
எங்கள் தம்பிரா னிசைகள் பாடிநின்
      றினைய வண்ணமங் கேத்தி நிற்பரே.

(374)
 

வேறு

642.

மனக்கமலங் கறுப்பதுவும் புனற்கமலஞ் சிவப்பதுநீ
      வையத் தெய்தி
எனக்கமலம் புரிந்தருளு மிருசரணங் காட்டாம
      லிருப்பி னன்றோ.

(375)

638. காதரம் அச்சம். வார்த்தை - உபதேசம், புகழ். “அழிந்தற மாயை யிருட்டெலா மறிவுரு வாகநம் மண்ணலார், மொழிந்தது மிங்கொரு வார்த்தையே மூவுல கும்மொரு வார்த்தையே” அஞ்ஞ.

640. உளவிலான் - அன்பர்களுடைய உள்ளமாகிய இல்லத்தை உடையவன்.

642. “அடியே முள்ளங் கறுப்பதுநல் லம்போ ருகங்கள் சிவப் பதுமிப், படியே வந்த பரனேநின் பாதங் காட்டாப் பண்டன்றோ” அஞ்ஞ.