| வேறு | | 643. | பொன்று மமரர் பெருவாழ்வும் புணர்மென் முலையார் போகமுமே நன்றென் றிருப்ப துன்றிருத்தாள் நயவா திருக்கு நாளன்றோ. | (376) | | | | 644. | வையந் தானுஞ் சிறியேங்கள் வாழ்க்கை தானும் வாழ்நாளும் மெய்யென் றிருப்ப தவனியினீ மேவி யாளா விடினன்றோ. | (377) | | | 645. | இந்நா டெய்தி யிருப்பதும்போய் எரிவாய் நரகத் திரங்குவதும் பொன்னா டெய்தி வாழ்வதுநீ பொலன்றாள் சூட்டாப் போதன்றோ | (378) | | | | 646. | வந்தே புவியிற் பிறப்பதற்கும் மாண்டு மீள மடிவதற்கும் அந்தோ வென்றே யிரங்குதனீ அஞ்சே லென்னா வளவன்றோ. | (379) | | | | 647. | உயிருக் குயிரா முனையுணரா துலைந்து திரிந்திங் குணரவியாம் செயிரைச் செறிவ துன்றிருத்தாள் சேரா திருப்பார் செயலன்றோ. | (380) | | | | 648. | அன்ன மாதி யைங்கோசம் அவத்தை கரண மகம்புறமாம் பின்ன மாகிச் சுழல்வர்நின் பெருமை யறியார் பிறரன்றோ. | (381) |
644. பி - ம். ‘வையந் தனையும்’, ‘வாழ்க்கை தனையும்’. 645. “போக்கும் வரவும் பொன்னோடும் புழுவார் நரகும் புசிப்பனவும், ஆக்க மழிவுந் திருக்கடைக்க ணணுகா திருக்கு மளவன்றோ” அஞ்ஞ. 646. “சாவா கின்ற பெரும்பிணிக்குஞ் சனிக்கும் பிணிக்குந் தடு மாற்றம், ஆவாவென்றுன் றிருக்கரத்தா லஞ்சே லென்னா வளவன்றோ” அஞ்ஞ. |