649. | பற்றா திருக்குஞ் சமயமுமப் பகுதி யொழுங்கும் பலநெறியும் முற்றா திருப்ப துன்றிருவாய் முகுள மலரா முன்னன்றோ. | (382) | | வேறு | | 650. | எத்தனையு மவதிபெறா திருக்கையுன தியல்பாமெத் தனையி லெம்மை வைத்தனையத் தனையதனி னிற்பதெங்க ளவதிநின்சீர் மதிப்பார் யாரே. | (383) | | வேறு | | 651. | ஓம்பிடுமிவ் வுடம்பானோம் வாயி லானோம் உடனிருந்த கரியானோ முணர்ச்சி தீர்ந்த மேம்படுபே ருணர்வானோ மெல்லா மானோம் வித்தகனே நீபுரிந்த விளையாட் டென்னே. | (384) | | | | 652. | பொய்யுணர்வங் கென்னவுமங் கதனால் வந்து பொருந்துபவ மென்னவுமப் புன்மை தீர்ந்த மெய்யுணர்வங் கென்னவுநின் றொருநீ தானே விளையாடல் புரிவித்த விரகி தென்னே. | (385) | | வேறு | 653. | அல்லல்வெம்பவ வாழிவற்ற வழன்றவீரன தாண்மையைப் பல்லவாறினி மொழிவதென்னடி பணிமினென்றவர் பணிவரால். | (386) |
649. “சமையா வெந்தச் சமயமுமெச் சடங்குஞ் சவலைத் தனமு மெலாம், அமையா ததுநின் றிருப்பவள மலரா திருக்கு மளவன்றோ” அஞ்ஞ. 650. எத்தனையும் அவதி - எவ்வளவும் எல்லை; “எவ்வளவு மளவு படா திருக்கை யுன்ற னியல்பாகு மெங்களையெவ் வளவின் வைத்தாய், அவ்வளவே யளவாகி யிருக்கை யெங்க ளளவாகு நின்பெருமை யறிவார் யாரே” அஞ்ஞ. 651. கரி - சாட்சி. “கடம்படுமிவ் வுடம்பானோங் கரண மானோங் கண்டிருக்குங் கரியானோங் காட்சி தீர்ந்த, திடம்படுபே ருணர்வானோ மெல்லா மானோந் திருவிளையாட் டிருக்கின்ற செயலீ தென்னே” அஞ்ஞ. 652. பவம் - பிறவி. விரகு - உபாயம். “அஞ்ஞான மென்னவுமங் கதனா னாய வனேகபவ மென்னவுமவ் வயர்வு தீர்ந்த, மெய்ஞ்ஞான மென்னவு நின் றொருநீ தானே விளையாட றோற்றுவித்த விரகீ தென்னே” அஞ்ஞ. |