பக்கம் எண் :

8. கூளி கூறியது 99

 

ஞானவினோதன் சிவஞான தேசிகர்பால் ஏகல்

 

654.

ஈறின்ஞான விநோதராண்மை யியம்புவார்க ளியம்பவவ்
வீறினார்தமை யாளுநாதர் விரைம லர்ப்பத மேவவே.

(387)
 

சிவஞானதேசிகர் ஞானவினோதனுக்கு முடிசூட்டல்

 

வேறு

 

655.

தீதின்ஞான சக்ரநீ செலுத்துகென்று செய்யதாட்
சோதிரத்ன மகுடநின்று சூட்டினானத் தோன்றலே.

(388)

   

656.

வீறுபெற்ற ஞானதீரன் வெண்கவிகை நீழல்வாழ்
பேறுபெற்ற நாயன்மார்கள் பெருமையாவர் பேசுவார்.

(350)

 

ஞான வினோதன் குடிகள்செயல்

 
 

வேறு

 

657.

நிகரற்ற தன்சோதி யுருவத்தை யங்கை
      நெல்லிப் பழம்போல நினையாம னினையப்
பகருற்ற விரகே யெனாநின்று பகர்வார்
      பழையோன் மலர்த்தாள் பணிந்தே துதிப்பார்.

(390)

     

658.

செவ்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேதன்
      திருமேனி யஃதன்றோர் செகமொன்றி லாதே
எவ்வண்ண நின்றானி தென்னென்று மொழிவார்
      என்னேயி தென்னேயி தென்னேயி தென்பார்.

(391)

   

659.

ஞானங்கி டீர்செய்ய திருமேனி யென்பார்
      நமையாள வருகின்ற தருளென்று நவில்வார்
ஈனங்கி டீர்வேறு முளதென்ப தென்பார்
      இவரேயிவ் வகைதேர்வ தென்னேயி தென்பார்.

(392)


657. விரகு - தந்திரம். “ஒழிவற்ற தன்சோதி யுருவத்தை நம்பா லுள்ளங்கை நெல்லிப் பழம்போல வுடையான், மொழிவற்ற விரகேயெ னாநின்று மொழிவார் முன்னோன் மலர்ப்பாத முடிமீது கொள்வார்” அஞ்ஞ.

658. “ஞானசக்ர மெங்குநீர் நடாத்துகென்று நல்லதாள், ஆனரத்ந முடிகவிப்ப வருளினானெம் மண்ணலே” அஞ்ஞ.

659. “பேதங் கிடீர் செய்ய பொன்மேனி யென்பார்” அஞ்ஞ.

பி - ம். ‘ஞானங்கடீர்’, ‘ஈனங்கடீர்’