660. | நந்தோட மறுமாறு புவனிக்க ணெய்தா நன்றோடு தீதற்ற நாதர்க்கு மிதுவும் அந்தோவ ரோவாவ தேயென்று மொழிவார் அருளோவி தருளோவி தருளோவி தென்பார். | (393) | | | | 661. | ஒழியாத பெருவாழ்வெ மக்காய பரனார் ஒளியாய திருமேனி யதுகாண வந்தோ விழியான தின்றா முடம்பெங்கு மென்பார் விழியற்ற நமதங்கம் வீணென்று மெலிவார். | (394) | | | | 662. | மூவாத பெருவாழ்வு தந்தானை யந்தோ முருடோநம் முடலெங்கு முகமா யநந்த நாவாய் வழுத்தா திராநின்ற தென்பார் நன்றோ வதற்கீது நன்றோவி தென்பார். | (395) | | | | 663. | தொழுகோ மெனச்செல்லு வார்செந் துணைத்தாள் தொழுமாறெவ் வாறென்று சோகித்து மோகித் தெழுகோடி கையில்லை யேயென்று நிற்பார் இரண்டாயி தமைகின்ற தேயென் றிசைப்பார். | (396) | | வேறு | 664. | ஒழிவற்ற செய்கையினார் செய்தி யென்னால் உரைப்பதுவோ கண்டங்கே யுணரி னல்லால் இழிவற்ற காலங்கள் குறையு மின்னே இருக்கின்றா ரன்னேயென் றிறைஞ்ச லோடும். | (397) | | | | 665. | அருள்புரிந்த நெறிக்கிதுவு மன்றே தீர்த்தல் ஆரியனுக் கொருபொருளோ வம்பொற் பாதம் தெருள்புரிந்த மனத்தோடும் வணங்கித் தேகம் சேர்ந்தபயன் பெற்றதன்றோ தெளியி னன்றே. | (398) |
660. “பொய்யோடு மெய்யேது மில்லாத பெருமான் புவனிக்க ணெம் மைப் புகுந்தாள விதுவும், ஐயோவொ ரளவாவ தேயென்று மொழிவா ரருளோவி தருளோவி தருளோவி தென்பார்” அஞ்ஞ. 661. “எண்ணாத பெருவாழ் வெமக்காய பெருமா னெழுதப் படா மேனி யிதுகாண வெங்கும், கண்ணான திலையே யெமக்கென்று மொழிவார் கண்ணல்ல காணாத கண்ணென் றுரைப்பார்” அஞ்ஞ. 662. “ஏயாத வெமையாளும் பெருமானை யென்னே யிரும்போநம் முடல்கொண்டெவ் விடமெங்கு மெங்கும், வாயாய் வழுத்தாதி ராநின்ற தென்பார் மலர்ப்பாத மீதுள்ள மாலாகி வாழ்வார்” அஞ்ஞ. |