பக்கம் எண் :

8. கூளி கூறியது 101

 

தேவி கூளிக்கு வரிசைசெய்தல்

 

666.

அவஞானம் போயகல விமையோர் தேட
      அடியார்கள் புடைசூழ வகில முய்யச்
சிவஞான தேசிகனார் கருணை மல்கித்
      திருத்தகவீற் றிருந்தநெறி செல்வி கேட்டே.

(399)
   

667.

வழுத்தரிய விறைவர்செயல் வகுத்துக் கூறும்
      மாசற்ற வலகைமுக மகிழ்ந்து நோக்கி
முழுத்தகனி வுடனன்னை யுச்சி மோந்து
      முன்னவனார் செயனன்று மொழிந்தாயென்றே.

(400)
  

668.

எடுத்தணைத்துக் காதலுடன் கண்டா னந்த
      இறையவனார் புவியின்வடி வெய்தி யெய்தும்
வடுத்தகையுஞ் செய்திசொல்ல வல்லா யெல்லா
      வளமுநீ பெறுகவென வரிசை செய்தே.

(401)

666. பி - ம். ‘தேசிகனார் தருணமல்கி’