9. களங்காட்டல். 669. | களங்காட்டு மஞ்ஞன்கட் டழித்துத் தூய கருணைநா யகன்பொருது கடந்த வென்றிக் களங்காட்டு கேனென்னா விறைவி போதக் காதலின்மோ கினிகளும்போய்க் கலந்து கண்டார். | (1) | | | | 670. | தானாக மதித்திருக்கு முடம்பு வேறாய்த் தணந்தொழியத் தணந்தொழியுந் தற்சூழ் சுற்றம் ஆனாத பெருந்துயரம் பிணங்கண் டேற அகன்றதுபோ லகன்றிடுமா காண்மின் காண்மின். | (2) | | | | 671. | ஒறுப்பமனந் தனைப்புலன்க ளைந்து மோய்ந்த துரகத்தி னடிக்கழுத்தை யுடன்று சீறி அறுப்பவழல் விடமுமிழ்வா யஞ்சுங் கூட அயர்ந்தழிந்த போலுமா காண்மின் காண்மின். | (3) | | | | 672. | வெப்புடைய மகமாயை மாய மாயும் விரிசகமற் றெரிகதுவ வேரிற்றாருக் கொப்புடனு மிலையினொடுங் கிளைக ளோடும் கொளுந்தியெரிந் தமையொத்தல் காண்மின் காண்மின். | (4) | | | 673. | விடிந்தொழிந்தே மினியென்று மாதர் தம்பால் வேட்கையிகந் தைம்புலன்சேர் விடய மெல்லாம் கடிந்தொழிந்தார் நிரதிசயா னந்த போகக் காமுகராய் முடிந்தபடி காண்மின் காண்மின். | (5) |
669. கள்ளத்தைக் காட்டும் அஞ்ஞன். 671. “தொத்தறவே மனந்துஞ்சப் புலன்க ளைந்துந் துஞ்சியவா நஞ்சு மிழ்வா யஞ்சுஞ் சேரக், கத்தறவே யடிக்கழுத்தை யரிய மாய்ந்த கறை யணற்கட் செவியொத்தல் காண்மின் காண்மின்” அஞ்ஞ. 672. தாரு - மரம். கொப்பு - சிறுகிளை. “மைப்படியு நறுங்குஞ்சி மாயை மாய மாய்ந்தபடி யகிலமெரி மருவ வேரிற், கப்புடனுங் கிளையுடனு மரநே ராகக் கரிசறப்பட் டமையொத்தல் காண்மின் காண்மின்” அஞ்ஞ. 673. “நெய்விட்ட கருங்குழலார் தம்பால் வைத்த நெஞ்சொழிந்தா ரைம்புலன்சே ரின்ப நேராக், கைவிட்டா ரொழியாவா னந்த போகக் காமுகராய் முடிந்தபடி காண்மின் காண்மின்” அஞ்ஞ. |