674. | சவலையுறு மறிவினரா யிகந்தார் மாட்டும் சந்தோடம் விளைத்தென்றுஞ் சலிப்பி லாதார் கவலையுறும் பெரும்பிறவிப் பௌவ முற்றும் காய்ந்தெரித்த கடுங்கோபங் காண்மின் காண்மின். | (6) | | வேறு | | 675. | வாராத பெருவாழ்வு பெற்றா மெனச்சொல்லி மாய்கின்ற பொருண்மீது மால்விட்டுளார் பேராத வானந்த மயபூ ரணத்தோடு பிரியாமை காண்மின்கள் காண்மின்களே. | (7) | | | 676. | புல்லாக மேநங்கள் வடிவென்றிருந்தார்கள் பொன்றாத பரிபூ ரணச்சோதியாம் நல்லாக மாயெய்த வவர்செய்த செயலின்று நன்றாதல் காண்மின்கள் காண்மின்களே. | (8) |
675. “பழிப்பாகி யொருகாலு மிதுகொண்டு கௌவுற்ற பயனற்ற பொருள்விட்டெலாம், அழித்தாலு மழியாத பொருள்பேணி யிவருற்ற வாராமை காண்மின்களோ.” அஞ்ஞ. |