10. கூழ். 677. | ஒப்பொன்று மில்லாத விந்தக் களங்கண் டுவந்தாடுவீர் வெப்பொன்று மில்லா தருங்கூழ் சமைப்பாரை விளிமின்களே. | (1) | | வேறு | | 678. | காந்தி தன்னொடு பிரியாத கண்ணி யெண்ணரு கதிநல்கும் சாந்தி யன்புறு காந்திநீர் தாமே கூழட வாரீரே. | (2) | | | | 679. | சான்ற வருளெனு மினிதாய தகையார் குழவி தனைநன்றா ஈன்ற வன்பெனு மாதாவே இனிய கூழட வாராயே. | (3) | | வேறு | | 680. | மெய்யே யொழிதரு பொறையே யெனுமியல் விரகி னிறைதரு மின்னேவீழ் பொய்யே யொழிதரு புகழே பெருகிய பொன்னீ கூழட வாராயே. | (4) | | | 681. | இன்ன திதுவென வெவரே யாகிலும் இன்றும் மறிவுற வெய்தாத அன்ன ததுவெனு மதனை யறிவதொர் அறிவீ கூழட வாராயே. | (5) | | | 682. | சித்தீ தேடிய பத்தீ கூடிய செல்வீ யாடிய சிங்காரி முத்தீ யற்புத வித்தீ வித்தக முன்னீ கூழட வாராயே. | (6) |
679. “அருளென்னு மன்பீன் குழவி” குறள். 680. “பொறையே மிகவரு நிறைவீ புகழ்புனை பொன்னீ யருளினை யுன்னீயக், குறையா நிறைவுறு திருவீ கூடிய வாரீர் கூழட வாரீரே” 682. “பணியே சூடிய வணியே பாடிய பத்தீ கூடய சித்தீநிர்க், குணியே கோமள மொழியே கூழட வாரீர் கூழட வாரீரே” அஞ்ஞ. |