| வேறு | | 683. | உலகமெனு முரலையமைத் துலகர்பழு வெனுமுலக்கை ஓச்சி யோச்சி உலகரெயி றெனுமரிசி யூழ்முறைகுற் றினிச்சமைக்க ஒருங்கு வாரீர். | (7) | | வள்ளைப் பாட்டு | | | வேறு | | 684. | ஆதியையா யிரகோடி யருமறைகண் டறியாத சோதியையாங் கண்டனமே சும்மேலோ சும்முலக்காய். | (8) | | | 685. | மங்கநெடு மாயையா மலிகடற்பட் டாழ்வேற்குத் துங்கவடி சூட்டினன்காண் சும்மேலோ சும்முலக்காய். | (9) | | | 686. | இற்றது மகாமாயை யெத்தனையு மெங்கோமான் சொற்றதுமோர் சொல்லேகாண் சும்மேலோ சும்முலக்காய். | (10) | | | 687. | கரிசறவே நாம்போகிக் கண்டுணரா நாமாதித் துரிசறவே யிருந்தனங்காண் சும்மேலோ சும்முலக்காய். | (11) | | | 688. | இணைபோய சராசரங்க ளெவைக்குமா கரமாகித் துணைபோய தொன்றேகாண் சும்மேலோ சும்முலக்காய். | (12) | | | 689. | மதிப்பதுவு மெங்கோமான் மலர்ப்பதமே வாயாரத் துதிப்பதுவு மதுவேகாண் சும்மேலோ சும்முலக்காய். | (13) | | | 690. | முழுவதுவுந் தானான முன்னவன்சே வடியன்றித் தொழுவதுவும் பிறிதுண்டோ சும்மேலோ சும்முலக்காய். | (14) | | | 691. | பாடுவது மெம்பெருமான் பதயுகமே தலைமீது சூடுவது மவையேகாண் சும்மேலோ சும்முலக்காய். | (15) |
683. பழு - பழுவெலும்பு. ஊழ்முறை குற்று : “உன்னேனென் றூழுலக்கை பற்றினேற்கு” (பழம்பாடல். ) “உலகவுரலை யமைத்து லக்கை யாகவிவ் வுலகர் பழுவை யொடித்தொ டித்து நீளெயி றுதிர்செய் தரிசி புடைத்திடித்து” அஞ்ஞ. 684. “அருவரையா யிரஞ்சிரங்கொண் டருமறைக ளறியாத, சொரு பரையாங் கண்டனமே சும்மேலோ சும்முலக்காய்” அஞ்ஞ. 686. “பின்னமொழி வகைபுகுந்தென் பெருங்கருணைப் பெருமானார், சொன்னமொழி யொன்றேகாண் சும்மேலோ சும்முலக்காய்” அஞ்ஞ. 687. நாமாதித்துரிசு - நாமம் முதலிய குற்றங்கள். |