692. | தகாநந்தந் தலைமீது தன்னடித்தா மரைசூட்டிச் சுகாநந்தந் தந்தனன்காண் சும்மேலோ சும்முலக்காய். | (16) | | | | 693. | ஊன்றுவது மஞ்ஞான மூன்றுமத னாலுதித்துத் தோன்றுவதுந் துடைத்தனன்காண் சும்மேலோ சும்முலக்காய். | (17) | | கூழடுதல் | | | வேறு | | 694. | பவவினை யுடைய பற்கள் பண்பிலா ருடைய பற்கள் எவைகளு மிடித்தீ ராகில் யாவையு முலையுட் பெய்யீர். | (18) | | | | 695. | இருவினை விறகெ ரித்தங் கென்பெலா முருக்கு மன்பாம் திருவினை யுள்ள வண்ணம் சீர்பெறக் குழைக்கச் சொல்லீர். | (19) | | | 696. | எற்பத பதார்த்தஞ் செல்லா திருப்பதா யின்ப முற்றும் தற்பத பதார்த்தம் பார்க்கச் சாந்தியை யிருத்திக் கொள்ளீர். | (20) | | கூழடுதல் | | | வேறு | | 697. | தழைத்த சுதையுந் தீம்பாலும் தண்ணென் கனியுந் தாமாக இழைத்த வடிசி லதைமெல்ல இறக்கும் பசியு மிறக்குமால். | (21) |
694. “மிடையிரு வினைகொள் பற்கள் மேவரு மறியார் பற்கள், அடையவ மிடித்தீ ராயி னடங்கலு முலையுட் பெய்யீர்” அஞ்ஞ. 695. “இழைக்கும்வல் வினையெரித்திங் கென்பெலா முருக்கி யுள்ளங், குழைக்குமெய்ப் பத்தி வந்து குறைவறக் குழைக்கச் சொல்லீர்” அஞ்ஞ. 696. பி - ம். ‘தற்பரபதார்த்தம்’ |