பக்கம் எண் :

10. கூழ். 107

698.

பெருமை யுடைய பெருமானார்
      பிறவி யறுக்குந் திருவடிக்கீழ்
ஒருமை யுடைய வடியவர்கள்
      உள்ளக் கலங்கள் விளக்குமால்.

(22)
  

699.

தேவி யடங்க வுளக்கலங்கள்
      செப்புங் கடங்க ளொடுமுள்ள
ஆவி யடங்க வமுதுசெய்க
      என்ன வவளு மருந்தினளால்.

(23)
  

700.

நாடுந் தேவி பிரசாதம்
      நாளு மயில்வீ ரயலாகி
வாடுங் கூளி தமக்குங்கூழ்
      வாரீர் நிறைய வாரீரே.

(24)
  

701.

கூடித் திரியு முடல்போகக்
      குறித்து வீடு புகுமாறு
தேடித் திரியும் பேய்களுக்குத்
      திகைப்புத் தீர வாரீரே.

(25)
  

702.

நிலையா விதனை நிலையென்று
      நின்று பசித்தே நிலைகாண
அலையா வமுது தருகென்னும்
      அப்பேய் தனக்கும் வாரீரே.

(26)
  

703.

இல்லா ததனை யுளதென்றே
      இருந்திங் கழிந்தே னிளைப்பாறச்
சொல்லா ரமுதந் தருகென்னும்
      தூங்கற் பேய்க்கும் வாரீரே.

(27)
  

704.

இற்பேய் பிடித்துப் பெறலரிய
      இன்பப் பொருளைக் குறியாத
பொற்பேய் தனக்கு வயிறாரப்
      போத வாரீர் வாரீரே.

(28)

698. கலங்கள் - பாத்திரங்கள். “தண்மை யாரும்வகை மீளு மாளுடைய தம்பிரானரிய தாள்கடாம், உண்மை யானுரிய வன்பரின்புறு முளக்கலங்களை விளக்கியே” அஞ்ஞ.

699. கடங்கள் - பானைகள்.

700. பி - ம். ‘ப்ரசாதநீர்’