பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்13

ஐந்து உருக்கொண்டு சோழவந்தானூர், கிண்ணிமங்கலம், பெரியகுளம், சின்னமனூர், மதுரை என்னும் ஐந்து ஊரினும் சமாதி கொண்டு வீற்றிருந்தருளிய ஸ்ரீ அருளானந்த அடிகளது திருவடிகளையும் அவ்வடிகள் சமாதி கொண்டருளிய ஐந்துபுண்ணிய தலங்களுள் சோழவந்தானூர் மடாயலத்தில் எழுந்தருளி வீற்றிருந்து எனக்குக் கல்விகற்பித்து, என் குலத்தார்க்கும் ஞான தேசிகராக விளங்குகின்ற ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகளது திருவடிகளையும் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்.