தொல்காப்பியம் சண்முகவிருத்தி 2. கடவுள் வாழ்த்து சித்தி விநாயகனார் தந்தமொன் றேய்கருங் குன்றையன் பார்த்துப் புந்திவெண் பாற்கட னாட்டு தூஉஞ் செந்தமி ழமிர்தந் திரண்டெழற் பொருட்டே. |
அறுமுகக் கடவுள் அந்தரி யீன்றருள் சுந்தர வறுமுகத் தெந்தை யடிப்புணை யெய்துதூஉஞ் செந்தமிழ்க் கடற்கரை யுந்துதற் பொருட்டே. |
அங்கயற்கண்ணம்மை தங்குநம் புந்தித் தடத்தினு மாலவா யங்கயற் கண்ணுமை யடிமலர் சங்கமுத் தமிழியல் சார்தரற் பொருட்டே. |
ஆலவாய்ப் பெருமானடிகள் அரிய தமிழிய லகத்தியற் குணர்த்திய குரவனற் றாளகங் கொள்வ லைய மருளது மெய்யுணர் வுறவே |
நல்லிசைப் புலவர் வான்றனி முத்தமிழ்ப் புத்தமிழ்து ஆதியி லான்றவர் கூட்டுண வகத்தியற் குணர்த்திய தேன்றரு மலர்ச்சடைத் தேசிகன் மான்றரு |
|
|
|