பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்165

நாணின்மை நின்றக் கடை எனவும் கூறினாராயினும் தக்கார் தகார் என அறியாவழிக் கொடையும், பழிபாவம் அறியாவழி நாணும் புலப்பாடு இன்மையானும், அவ்வறிவும் அந்தணர் அறுதொழில் முதலாய பிறவும் கல்வியால் பெறல்வேண்டும் ஆகலானும் என்பது.

இனிக் குடிப்பிறப்பும் கல்வியும் ஒழிந்த தூய்மை முதலாய ஆறுவகை உறுப்புள்ளும் கல்வியான் எய்தற்பாலவாகிய சிறப்பியல்பு ஒழிந்த பொது இயல்பே கொள்ளப்படும். என்னை? கல்வியான் வாய்மை இலக்கணம் உணர்ந்து ஒழுகிய பின்னரே அகம் தூய்தாம் ஆகலின் அஃது ஒழிந்த புறம் தூய்மையும், கல்லாமலே தந்தை முதலாய உலகத்தைக் கண்டொழுகும் ஒழுக்கமும், பொய்மையும் வாய்மை இடத்த ஆதல் புரைதபக் கற்றபின் அறியப்படும் ஆகலான் அஃது இன்றி,

1“அற்றன் றாத லதுதான் மனஞ்செய்தல்
 சொற்றன் மாட்டு நிகழ்த்தல் பிறனோர்த்தன்
 மற்றித் தன்மை படுமாயின் மாண்பிலாக்
 குற்றப் பொய்யென் றுரைப்பர் குணமிக்கார்.’’

எனக் கூறினார் ஆகலின் ஒருவன் பிறர் கேட்பச் சொல்லுழிச் சொல்லியவாறு அன்றாதலை அவன் உணர்தலாகிய பொய்யுரை இல்லா வாய்மையும், கற்றார்க்கு அன்றி முற்றும் விலக்கல் அருமையின் பிறரது மேன்மையும் கொடையும் கண்டு அழுக்கறுத்தல் இன்மையும், பிற வெஃகாமை கல்வியான் வரற்பால ஆகலின் பிறன்பொருள் வெஃகாமையும், பிற நடுவுநிலைவகை அறிவுமிக்க பின்னர்த் தாமே எய்தும் ஆகலின் நண்பு நண்பன்மை என்னும் பகுதிபற்றி உளதாகும் நடுவுநிலையும் என, அவ்அறுவகை உறுப்பின் பொது இயல்பே மாணாக்கர்க்கு ஏற்பன ஆகலின் என்பது,

இனிக் கோடல்பற்றிய சிறப்பியல்பும் ஈதல்விகற்பமே போலக் காரணவகையான் எண்வகைப்படும் ஆயினும், வினையும் செய்வதும் கருவியும் ஒழிந்த செயப்படுபொருள் முதலாய ஐந்தும் ஈவோர்க்குச் சொல்லிய அன்றிக் கொள்வோர்க்கு வேறாக இன்மையானும், கோடலைச் செய்வோனது சிறப்பியல்பு ஈதலைச் செய்வோனது சிறப்பியல்பும் ஈதலியற்கையும் உரைத்தவழிப் பெறப்பட்டமையானும், கோடற்கு இன்றியமையாக் கருவியாகிய


நீலகேசி உரை மேற்கோள்.