வழிபாடு முதல்காரண வினையுள் அடங்கலானும், செல்வம் இளமை முதலாய துணைக்காரணம் சிறப்பின்மையான் உரைக்கப்படாமையானும், அவை மேல் உரைத்தன கொண்டு தாமே உய்த்து உணரலும் கூடுமாகலானும், கோடல்காரணம் எட்டனுள் முதலாவதாகிய வினையின் பகுதி பலவற்றுள் முதல் காரணவினை ஒன்றே ஈண்டுக் கொள்ளப்படும் என்பது. இனிக் கொள்வோனது பொதுஇயல்புள் குடிமை உரைக்கற்பாற்று. அன்னம் வெண்ணிறத்தது ஆகலின் நகை உடைத்து. பெருங்குரல் உடைமையின் இன்சொல் இன்று. கிளி இன்சொல் உடைத்து. வளர்ப்போர் உரைத்த மொழியினைக் கேட்டு இறுத்தல் செய்யாமல் அதனையே சொல்லலின் இகழ்தல் உடைத்து. நன்னீரம் தன் மருங்கு எந்நீரர் தோயினும் அவர் மாசு போக்கலின் இகழல் இன்று. நீத்தறியாதார் தோயின் அவரை அமிழ்த்தலின் அன்பின்று. நெய்யரி மரனை விடாது பற்றிநிற்றலின் அன்பு உடைத்து. மரத்தின் அடிக்கண் தங்காது மேல்நிற்றலின் பணிவு இன்று. யானை 1பரியது கூர்ங்கோட்ட தாயினும் பாகற்கு அடங்கி நடத்தலின் பணிவு உடைத்து. பல நன்றி செய்யினும் அதனைக் கொள்ளாமல் ஒரு தீங்கு செய்யின் அதனை மறவாது மனத்துள் மறைத்துச் சமயம் நேர்ந்துழிக் கொல்லும் இயல்பிற்று ஆகலின் செப்பம் இன்று. ஆனேறு வெகுளி தோன்றின் கோடு முதலாயவற்றானும், உவகை தோன்றின் முக்காரம் முதலாயவற்றானும் அகத்துள்ளவற்றையே புறத்தும் காட்டும் இயல்பிற்று ஆகலின் செப்பம் உடைத்து. இவ்வாற்றான் அன்னம் முதலாய ஆறும் மாணாக்கற்குப் பிண்ட உவமம் ஆகலின் கிளி முதலாய ஐந்தும் இன்சொல் இன்மை முதலாய ஐந்து குற்றத்தைக் களைதலின், நகை முதலாய அவ்வாறு குணமும் ஒருங்கு உடையான் மாணாக்கன் என்பது பெறப்பட்டது. இனிக் குரங்கு வலிமுகத்ததாகலின் நகையின்று, சிறுகுரல். உடைமையின் இன்சொல் உடைத்து. எரி கடுஞ்சொல் என்னச் சுடும் இயல்பிற்று ஆகலின் இன்சொல் இன்று. உணவாக யாது இட்டாலும் ஏற்றலின் இகழல் இன்று. விலங்கு வேந்தனால் ஒறுக்கப்பட்டாரை இவர் குற்றம் செய்தோர் எனக் காட்டலின் இகழல் உடைத்து. பிறர் விலக்கின் அன்றித் தானாக நீங்காமையின் அன்புடைத்து.
1திருக்குறள். 599 |