இனி வேளாண் வாழ்க்கை முதலாயவும் அவற்றின் மறுதலையும் மலையானும் குடத்தானும் கொண்டாங்கு, சொல்லிய பொருண்மை சொல்லியாங்கு உணர்தல் முதலாய பிறவும் அவற்றின் மறுதலையும் தனி உவமத்தான் உய்த்து உணர்ந்து கொள்ளப்படும். இனிக் கோடல் மரபு உரைக்கற்பாற்று கோடல் மரபு என்னை எனின்; 1,2“கொள்வோன் முறைமை கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடன் முனியான் முன்னும் பின்னு மிரவினும் பகலினு மகலானாகி யன்பொடு புணர்ந்தாங் காசற வுணர்ந்தோன் வாவென வந்தாங் கிருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் போவெனப் போகி நெஞ்சுகள னாகச் செவிவா யாகக் கேட்டவை கேட்டவை வல்லனாகிப் போற்றிக் கோட 3லவனது தொழிலே.’’ |
எனவும், 4“எத்திற மாசா னுவக்கு மத்திற மறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே.’’ |
எனவும், 5“வழக்கி னிலக்கண மிழுக்கின் றறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்த லாசாற் சார்ந்தவை யமைவரக் கேட்ட லம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை கடனாக் கொளினே மடநனி யிகக்கும்.’’ |
எனவும், 6“அனைய னல்லோன் கொள்குவ னாயின் வினையி னுழப்பொடு பயின்றலைப் படாஅன்.’’ |
1தொல், பாயிரம், இளம்பூரணர் உரை மேற்கோள் 2‘கோடன்மரபே’ என்பதூஉம் பாடம். 3‘அதுவதன் பண்பே’ என்பதூஉம் பாடம். 4,5,6தொல், பாயிரம், இளம்பூரணர் உரை மேற்கோள் |