1“நூலே நுவல்வோ னுவலுந் திறனே கொள்வோன் கோடற் கூற்றா மைந்து மெல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம்.’’ |
என்றார். அஃது இலக்கணம் அன்று. என்னை? யாதானும் ஒன்றன் பெருமை முதலாயவற்றைப் பிறர்க்கு உணர்த்தலாகிய புற உரையே பாயிரம் என்னும் சொற்குப் பொருளாம். அது பாயிரங் கூறிப் படை தொக்கா லென்செய்ப என்னும் பழமொழிச் செய்யுளானும் விளங்கும். அப்புற உரைதான் இருவகைத்தாய் நூல்செய்தான் கூறில் தற்புகழ்ச்சியாக முடிதலின் பிறரால் கூறப்படும் இயல்பு உடைத்தாயிற்று. அதுதான் இன்னின்ன இலக்கணம் உடைய ஆசிரியன் இன்னவாறு நூலைக் கூற இன்னின்ன இலக்கணம் உடைய மாணாக்கன் இன்னவாறு கேட்டல் வேண்டும் எனின், எல்லா நூலுக்கும் பொதுவாகி முடிதலின் பொதுப்பாயிரம் எனவும், இன்ன பெயருடைய ஆசிரியன் இன்ன எல்லையுள் நடக்கும் இன்ன நூலின் வழித்தாக இன்ன பெயரிட்டு இன்ன யாப்பால் இன்ன பொருளை அமைத்து இன்ன பயனுடைத்தாக நூல்செய்ப, அதனை இன்னின்ன பெயருடைய ஆசிரியர் கேட்டுக் குற்றமின்மை ஆராய்ந்து நன்றெனக் கொண்டார் எனின், அஃது ஒரு நூலுக்கே பெருமையாக முடிதலின் சிறறப்புப் பாயிரம் எனவும் பெயர் பெறும். இவ்வாற்றான் நூல் இயல்பு பாயிரமாகிய புற உரையோ அன்றேல் அதன் இலக்கணமாகிய அக உரையோ என ஆராயின் ஆசிரியர் செய்யுள் இயலில், 2பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே யங்கத முதுசொலோ டவ்வேழ் நிலத்துமென ஏழ்நிலம் கூறி அவை எல்லாவற்றுக்கும் இலக்கணம் கூறினார் ஆகலின், அவற்றுள் ஒன்றாகிய நூலின் இயல்பும் ஆக்கியோனால் கூறப்படும் அகவுரையாகிய இலக்கணம் ஆகலன்றிப் பெருமையை அறிவித்தலால் பிறரால் கூறப்படும் புறவுரை ஆகாமையானும், ஆகுமெனின் அந்நூலோடு ஒருங்கு எண்ணிய ஏனைப் பாட்டு முதலாய ஆறனது இலக்கணமும் பாயிரம் எனல் வேண்டும் ஆகலானும், பாயிரம் நூலது பெருமையைப், பிறர்க்கு அறிவித்தல் ஒழிந்து அதன் இலக்கணம் கூறுமாயின் அதுபோலவே
1பொதுப்பாயிரம். 9. 2தொல், பொருள். 387 |