பக்கம் எண் :

194பாயிர விருத்தி

சொல்லாகவும் நின்றுஇருதன்மையும் பெற்றவழிச் சொல்லுக்கு உறுப்பாதல் தன்மை எய்தா எனவும், தம்மை உணர்த்தும் ஒரு தன்மை உடையவாய வழியே ஆட்டம் ஈட்டம் ஊக்கம் என்றாற் போலச் சொற்கு உறுப்பாகும் எனவும் அறிக.

இனி ஈண்டுக் கூறும் பொருள் யாதோ எனில், சொல்தொடரே நிலமாக மனக் கருவியான் உணரப்படும் அறம் பொருள் இன்பங்களும் அவற்றது நிலையாமையுமாகிய அறுவகைப் பொருளுமாம்.

இனி வீடு கூறாரோ எனின், அது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின் வீடுபேற்றுக்கு நிமித்தம் கூறலன்றி அதன் தன்மை கூறார். அந்நிமித்தம் அறத்தின் பகுதியாகிய துறவுள் அடங்கும். இக்கருத்தானே தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் முப்பாலாகக் கூறி மெய்யுணர்தலாம் நிமித்தம் கூறினார் என்பது.

இனி எழுத்துச் சொற்பொருளுக்கு வழக்கும் செய்யுளும் முதலாக நிற்றலானும், அவை உளவாதற்கு நல்லுலகம். முதலாக நிற்றலானும், அவ்வுலகம் அக்காலத்து வடமொழி கூறும் உலகமும் தென்மொழி கூறும் உலகமும் என இரண்டே ஆகலின் வடமொழி கூறும் உலகம் அன்றென விலக்கற்குத் தமிழ் அடையாகல் வேண்டும் ஆகலானும், அத்தமிழ் இன்ன இடத்து வழங்குமென எல்லை கூறல் வேண்டும் ஆகலானும், அவ்எல்லையைத் திசைகூறி அறிவித்தலே மரபு ஆகலானும், திசை நான்கு ஆகலின் அவற்றை உணர்தற்கு அவற்றுள் வடக்கே காரணம் ஆகலான் அதுவே முதல்திசை எனப்படலானும், வடவேங்கடம் எனத் தொடங்கி ஏனையவும் அம்முறையானே கூறினார் என்பது.

இனி நாடுதல் என்பது, எழுத்துச் சொற்பொருளை ஆராய்ந்து உள்ளவாறு உணர்தல். அது சிவணிய என்னும் பெயரெச்சவினை கொண்டது. செந்தமிழ் செம்மையை உடையதாகிய தமிழ். செம்மை எஞ்ஞான்றும் விகாரமின்றி ஒருதன்மைத்தாகி நிற்கும் மரபு. இதனைச் 1சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு என்பதனானும் அறிக. இயற்கை அத்தமிழின்கண் ஒருவரால் கற்பித்துச் சொல்லப்படாமல் அநாதியே இயல்பான் அமைந்த இலக்கணம். சிவணிய என்னும் எச்சம் நிலம் என்னும் இயற்பெயர்ப் பொருளைக்


1குறள் 358.