பக்கம் எண் :

34பாயிர விருத்தி

என்றார் ஆகலின், விரும்பினோர் எல்லாம் உண்ணுமாறு வெளிக் காட்டாது மறைக்கும் இழிந்த கருமத்தின் நாணுதலின்றி நிமிர்ந்து, 1புலத்திலிற் புத்தேணா டுண்டோ எனத் தாமே ஊடி அவ் ஊடலை உணர்த்துமாறு தம் காதலர் வழிபாடுசெய்யின் அதன்பொருட்டு நாணும் குலமகளிர் நாணுப்போல, அத்தும்பி தேன் உண்ணற் பொருட்டுப் புறந் தைவந்து இசைபாடித் தலையால் வணங்கும் வழிபாட்டினால் நாணிக் கவிழ்தலின் நாண் இன்மையும் எனக் குற்றம் இரண்டு உடைத்து.

துலாக்கோல் நாவகத்து உள்ள நிறைகாட்டற்பாலவாகிய வரையும் புறத்துள்ள பொருளும் தம்முள் மாறாகாமையால் செப்பமும், 2யானோக்குங் காலை நிலனோக்கும் என்றார் ஆகலின் அத்ததன்மையராய குலமகளிர்போல மக்கள் நோக்குங்காலை நாணுதலின்றி வரையும் பொருளும் மாறாயவழி.

3“நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டா
  னாண்டுறவார் நாணாள் பவர்.’’

என்றார் ஆகலின், அவ்வண்ணமே கோடாமை என்னும் தன்னுயிர் துறந்து, நடுவணதாகிய தன் நிலன்விட்டு மேலதுகீழது எனப் பிறிதொருநிலன் நோக்கிச் செல்லுதலின் நாணும் உடைமையின் அக்குற்றம் இன்று.

இனி ஆசிரியன் தாய்மரபு தந்தைமரபு என்னும் இருவகைக் காரணமும் குற்றமின்றிப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதலின், வலம்புரியும் மழைத்துளியுமாகிய இருவகையும் குற்றமின்றி மேம்பட்ட வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்புடையனாதலின் ஈகை முதலாய குடிமை எட்டும் இயல்பின் உடையான். 4இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி என்றார் நக்கீரனாரும்.

இனிக் கழற்பெய்குடம் ஈரமில் கழற்காய் உடைமையானும் தனக்குக் காரணமாய மண்ணைக் குயவன் மிதித்துச் சுடலானும் இருவகை மரபும் குற்றமுடைமையின், அக்காய் தன்கண்


1திருக்குறள் 1323.

2திருக்குறள் 1094.

3திருக்குறள் 1017.

4திருமுருகாற்றுப்படை 178- வது அடி