1“இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ள படி.’’ |
என உயர்குலத்திற்கு ஈதலையே முதன்மையாகக் கூறினாராகலின் என்பது. இனி அவற்றுள் மலை, தனக்குக் காரணமாகிய நிலம் நீர் என்னும் இருவகை மரபும் குற்றமின்றிப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டுவரும் உயர்பிறப்பு உடைமையின் அருவி முதலாய உள்ளன கொடுக்கும் ஈகையும், புறத்தே அருவி விரிந்து மலர்தலின் நகையும் எனக், குடிமையுள் இரண்டனை இயல்பாக உடைத்து. அம்மலை அக்குணத்தோடு அருவியின் ஓசையான் வன்குரல் காட்டலின் இன்செல் இன்மையும், தன்னைக் கூஉய் அழைப்பின் அவர்க்கு இறுத்தல் செய்யாமல் அவர் உரைத்த மொழியினையே தானும் கூறி எதிரொலி செயலின் இகழலும் எனக் குற்றம் இரண்டு உடைத்து. இனி நிலன், வன்குரலும் எதிரொலியும் செய்யாமையின் அக்குற்றம் இன்று, தன்மாட்டுத் தொடர்புடையாராய சாலியர் ஏரால் உழுதலைச் செய்தபின்னர்ப் பசியால் வருந்துதலைக் கண்டும் உணவளியாமையின் அன்பின்மையும், சான்றோர் தன்முகத் தெதிர் வரின் இருந்தபடியே கிடத்தலின் பணிவு இன்மையும் எனக் குற்றம் இரண்டு உடைத்து ஈண்டுச் சாலி என்றது நெல்லினை; சாலியர் நெற்பயிர் விளைப்போர். பூ, பசியான் வருந்திய தும்பிக்குத் தேன் ஈதலானும் இசை பாடலில் சான்றதாய அத்தும்பி, தன்முகத்தெதிர்வரின், அதன் அடியைத் தன்முடிமேல் தாங்கித் தாழ்தலானும் அக்குற்றம் இன்று. அகத்தினுள்ள தேனைப் பிறர் காணாவகை ஒளித்துத் தான் உள்ள எல்லாம் கொடுப்பதுபோலப் புறத்தே முகமலர்ச்சி காட்டலின் அகமும் புறமும் தம்முள் மாறாயவாற்றால் செப்பம் இன்மையும், 2“கருமத்தா னாணுத னாணுத் திருநுத னல்லவர் நாணுப் பிற.’’ |
1நல்வழி 2 வது பாட்டு. 2திருக்குறள் 1011. |