பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்49

ஆதற்குரிய வித்தாகிய முதலைப் பெறாமையின் வாணிகம் இன்று. மடல் விரிந்தகாலைக் கீழ்த் தூங்குவன எருமைக் கடாக்களின் காலெனவும் மேலுள்ளது உழுபடைக் கருவி எனவும் தோன்றும் ஆதலின் உழவு உடைத்து.

அத்தெங்கு, உழுதற்குரிய கருவியுள் ஒன்றும் இன்மையின் உழவின்று, தன் ஈர்க்கினைத் துரால் குப்பை நீக்கும் கருவியாகக் கோயில் முதலாயவற்றுக்கு அளித்தலின் தக்கார்க்கு ஈதல் உடைத்து.

அப்பருத்தி, தன் பஞசினைத் தக்காராய நூற்போர்க்கு அளியாது தகாராய சிறார்க்கு அளிதல் உடைத்து.

இவ்வாற்றான் வணிகருள் அவ்இருவகையாரது தன்மை உணரப்படும்.

இனி வேளாளர் இயல்பு என்னை எனின், மேல் வணிகர்க்குக் கூறியவற்றுள் வேட்டல் ஒழிந்த ஐந்தனொடு வழிபாடும் என இருமூன்று மரபினவாய பக்கம் என்பது. ஒருசார் ஆசிரியர் வழிபாடு கொள்ளாமல் பெண் கோடல்பற்றி வேட்டல் உளதென அதனைக் கூட்டி ஆறு என்பாரும் உளர். அவர் அரசரால் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்து என்பர்.

இனி மலை, இலனென்னும் எவ்வம் உரைத்துத் தான் பிறர் மாட்டு இரவாமையும் இரப்பார்க்குத் தன்மாட்டு உள்ள பொருளுள் யாது வேண்டினும் சிலையாகிய தன் உறுப்புள் யாது வேண்டினும் வரையாது ஈதலும் உடைத்து.

இனி,

1“இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
  கைசெய்தூண் மாலை யவர்.’’

எனவும்,

2“இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
  குலனுடையான் கண்ணே யுள.’’

எனவும்,


1திருக்குறள் 1035

2திருககுறள் 223.