பக்கம் எண் :

 7

1. நன்றி கூறல்

“வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென
வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக
ழானாப் பெருமை யகத்திய னென்னு
மருந்தவ முனிவ னாக்கிய முதனூல்
பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்து
நல்லிசை நிறுத்த தொல்காப் பிய’’ னரு
ளுருவ னாய பெருமா னாகலி
னல்லலற் றுயரிய வன்னா னடிமலர்
எல்லொளி பரப்புமா லெற்கும்
வல்லிரு ணீங்க மனத்துநின் றினிதே.

உலகத்து வழங்கு மொழிகள் பலவற்றினும் சிறந்து, பண்டைக் காலம் தொட்டே அண்டரும் முனிவரும் கொண்டாடப் பெற்று வழங்குவது நமது தண்டமிழ்மொழியே என்பதூஉம், அம் மொழிக்கு முதல் நூலாவது, வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழானாப் பெருமை அருந்தவ முனிவரென்னும் ஆசிரியர் அகத்தியனராக்கிய அகத்தியமாம் என்பதூஉம், அந்நூலும் அதன்வழித் தோன்றிய பிற பன்னூலும் இறப்ப, இக்காலத்தும் வீழாஞாயிறென நின்று விளங்கி வாழ்வது அகத்தியத்தின் வழித் தோன்றிய மகத்துவமுடைய நூல்கள் பலவற்றினும் உயர்ந்த ஒல்காப் பெருமைத் தொல்காப்பியம் ஒன்றே என்பதூஉம், அத்தொல்காப்பியத்திற்கு ஒருவர்பின் ஒருவராகத் தம்முள் ஒருவரை யொருவர்மறுத்து உரை எழுதிய வித்தகர் இதுகாறும் ஐவராவர் என்பதூஉம், அவ்வுரைகளைத் தழுவிச் செய்த நன்னூல் முதலாய பின்னூல் பலவும் முன்னூல்போலப் போக்கற்றனஅல்ல என்பதூஉம், கற்றறிந்த செப்பமுடையார் எல்லாரும் ஒப்ப முடிந்தவே ஆகலின், அவற்றைப்பற்றி ஈண்டு ஒன்றேனும் உரையேன். அத்தொல்காப்பியத்திற்கு உத்தம உணர்வு ஒருசிறிதும் இல்லாத யானும் உரைசெய்யத் துணிந்து எண்ணிய வகையும், உரைசெய்யத்