இனி ஞானத்து இயல்பு என்னை எனின்: 1“காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற னாமங் கெடக்கெடு நோய்.’’ |
என்றார் ஆகலின், அம்மூன்றனது இன்மையும் எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயனுமன்றி முன்கிடந்த துன்பங்களும் மேல் வரக்கடவ துன்பங்களுமாகிய நோயின்மையும் என அவ்வியல்பு நால்வகைப்படும் என்பது. அவ்வகையினை, 2“மறுவில் செய்தி மூவகைக் காலமு நெறியி னாற்றிய வறிவன் றேயமும்.’’ |
என்னும் இவ்வாசிரியன். அவற்றுள் மலை, மறுவில் செய்தியுள் காமம் இன்மையை மூவகைக் காலமும் நெறியின் ஆற்றல் உடைத்து. எதிர்வரு பொருளை அருவி என்னும் கையால் தள்ளலின் வெகுளியும் உடைத்து. நிலன் 3அகழ்வாரைத் தாங்கலின், வெகுளியின்று, உழவர் இட்ட வித்தான் வந்தமையின் நெற்பயிர் முதலாயின தன் பொருளாகாமையானும், அப்பொருட்குக் கேடு பயக்கும் களையே தன் பொருளாக முடிதலானும் 4பொருளல்ல வற்றைப் பொருளென்றுணரும் அருளுடைத்து. பூ, மகரந்தமும் மணனும் இதழும் தேனும் எனப் பயன்படு பொருளுடைமையின் மருளின்று. காய்த்துப் பழுத்து வித்தாகிப் பின்னும் முளைத்தலின் நோயுடைத்து. துலாக்கோல், எத்துணைக் காலம் நீர்பெய்து நட்டு வைப்பினும், எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயனும் அன்றிப் பின்னும் முளைத்து வினைசெய்யாமையின் நோயின்று. அக்குடம், கழல் வெஃகலின் காமம் உடைத்து; வெகுளி இன்று.
1திருக்குறள். 360. 2தொல்,பொருளதிகாரம் 75. 3திருக்குறள் 151. 4திருக்குறள் 351. |