தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 15 |
அகன்ற மணல்நிலப்பகுதியும்; முல்லை குறிஞ்சி மருதம், நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே = முறையே முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற திணைவரிசையாற் சொல்லவும்படும். குறிப்பு : சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்பதனால், இந்த நாற்றிணைக்குரிய நானிலங்களும் ஈண்டுச் சொல்லாத வேறுமுறையாலும் கூறப்பெறும் என்பது பெறப்படும். இதில் நானிலப்பகுதியும் அவற்றிற்குரிய திணைப்பெயரும் நிரனிரையால் கூறப்பெற்றன. ஈண்டுக்கூறப்பெற்ற மாயோனுஞ் சேயோனும், கருநிறக் கடவுளுஞ் செவ்வேளுமாகத் தொன்று தொட்டுத் தமிழர் தொழும் கடவுளராவர். கருநிறத்தைப் பழிப்பதன்றிப் பாராட்டுதல் தொல்லாரியர் வழக்கன்று; தமிழிலோ எழில் பாராட்டி “மாயோன்” எனவும் “மாயோயே” எனவும் வரும் பழம் பாட்டுக்களின் தொடர்களும் குறிப்புக்களும் இங்குச் சிந்திக்கத்தக்கனவாம். இனி, இந்திரனும் வருணனும் ஆரியர் வழிபடுங் கடவுளராய்க் கருதப்பெறினும், அறப்பழங்காலத்தே அவர் தமிழர் வழிபட்ட தெய்வங்களாகவும், பிறகு அவரிடம் ஆரியர் வாங்கித் தம் வழிபடுகடவுளராக்கிக் கொண்டனரெனவும் சில மேனாட்டுப் புலவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளால் அறிகின்றோம். உண்மையெதுவாயினும் பண்டைக் காலமுதல் இக்கடவுளர் பெயரும் வழிபாடும் தமிழகம் அறிந்ததென்பது தெளியப்படும். இச் சூத்திரத்தானும் முன்னைய சூத்திரத்தானும் முதற்பொருளின் முதற்பிரிவான நிலத்தியல்பும் திணைத்தொடர்பும் கூறப்பெற்றன. இனிவருஞ் சூத்திரங்களால் இதன் இரண்டாம் பிரிவான காலவியல்பும் பாகுபாடுகளும் கூறப்படும். சூத்திரம் : 6 | | | காரு மாலையு முல்லை; குறிஞ்சி கூதிர் யாம மென்மனார் புலவர். |
கருத்து : இதுமுதல் 11 வரை ஆறு சூத்திரங்கள் காலமுதற்பொருள் திணையுரிப்பொருளுக்கு உரிமை கொள்ளுமாறு கூறுகிறது. பொருள் : காரும் மாலையும் முல்லை = கார்காலமாகிய பெரும்பொழுதும், மாலையாகிய சிறுபொழுதும் முல்லைத் |