தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 17 |
“சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட் பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் பிறரும் கேட்குந ருளர்கொல்? உறைசிறந் தூதை தூற்றுங் கூதிர் யாமத் தானுளம் புலம்புதொ றுளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலே” (குறுந். 86) இதில், கூதிரும் யாமமும் கூடுதலாகிய காலம் குறிஞ்சிக் குரித்தெனல் காண்க. “காம மொழிவதாயினும்”எனும் கபிலர் குறும்பாட்டில் (42) யாமமும், “யாது செய்வாங்கொல் தோழி” எனும் நன்னாகையார் குறும்பாட்டில் (197) கூதிரும் குறிஞ்சிக்குரித்தாதல் குறிக்கப்படுதலுமறிக. சூத்திரம் : 7 | | | பனியெதிர் பருவமு முரித்தென மொழிப. |
கருத்து : இது மேலைச்சூத்திரத்திற்கோர்புறனடை; முன்பனியும் குறிஞ்சிக் குரித்தாமெனக் கூறுகிறது. பொருள் : பனியெதிர் பருவமும் = முன்பனிக் காலமும், உரித்தென மொழிப = குறிஞ்சித் திணைக்குரிய தெனக் கூறுவர் (புலவர்). குறிப்பு : பனி எதிர்பருவம். எனவே, மாலையிற் பனிதோன்றும் முன்பனிக் காலமாயிற்று. முன்பனிக்காலமாவது மார்கழி தை எனுந்திங்களிரண்டு கொண்ட பெரும் பொழுதாம். ‘பருவமும்’ என்பதிலும்மை குறிஞ்சித்திணைக்குக் கூதிரேயன்றி இப்பருவமும் உரியதாம் எனப்பொருள் தருதலால், இறந்ததுதழீஇய எச்சவும்மை. ‘மொழிப’ என்பதனால் அதற்குரிய எழுவாயான புலவர் என்பது அவாய் நிலையாற் கொள்ளப்படும் முன்பனிப்பருவம், கூடற்குரியது, பிரிவரியது, என்பதற்குச் செய்யுள் “உள்ளார் கொல்லோ, தோழி! மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்திமைப் பதுபோல் விளங்குபு மறைய எல்லை போகிய பொழுதின் எல்லுறப் பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப் |