18 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
பல்லித ழுண்கண் கலுழ நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே” எனும் நற்றிணை (241ஆம்) பாட்டில், பின் பெயலாகிய கூதிர்கழிந்தபின் முன்பனிப்பருவ யாமப் பொழுது குறிஞ்சியாகிய கூடற்குரிமையும் பிரிவருமையும் ஆதலறிக. “கொண்டலாற்றி” எனும் நற்றிணை (89ஆம்) பாட்டில், “. . . மாமழை அழிதுளி கழிப்பிய வழிபெயற் கடைநாள் இரும்பனிப் பருவத்து . . . . . இன்னும் வருமே தோழி, வாரா வன்க ணாளரோ டியைந்த புன்கண் மாலையும் புலம்புமுந் துறுத்தே” என்பதுமது. இதில் வழிபெயற் கடைநாள் இரும்பனிப்பருவம் எனவே, பின்பெயற் கூதிர்கழிந்த முன்பனி எனத் தெளிக்கப்பட்டது. சூத்திரம் : 8 | | | வைகுறு விடியல் மருதம்; எற்பாடு நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும். |
கருத்து : இது, மருதம் நெய்தல் திணைகளுக்குப் பருவமும் பொழுதும் குறிக்கின்றது. பொருள் : வைகுறு விடியல் மருதம் = பொழுது புலராத இரவினிறுதிப் பகுதியான வைகறையென்னும் சிறுபொழுதும் பொழுதுபுலர்ந்து எல்லெழுங் காலையான விடியலென்னும் சிறுபொழுதும், மருதத்திணைக்குச் சிறந்தனவாகும்; எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத்தோன்றும் = சுடர்படும் பகற்கால மூன்றாம் பகுதியாகிய சிறுபொழுது நெய்தற்றிணைக்கு உரியபொழுதாதல் பொருள்பெறத் தோன்றுவதாகும். குறிப்பு : இதில், “வைகுறிள வேனில் மருதம்” என்னும் பாடம் மருதத்திணைக்குப் பொழுதும் பருவமும் வழுவாதுரைக்கு |