தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 19 |
சிறப்புடைத்து. இனி எல்படும் பொழுதை எற்பாடென்பது தமிழ் வழக்கு. இன்றும் தமிழ் வழக்கறியா மேல் கடற்கரையில் படுஞாயிற்றின் திசையைப் ‘படுஞாறு’ என வழங்குதல் உலகறிந்த செய்தி. இதில் வைகுறு என்பது வைகறையின் மரூஉ “வைகறை விடியல்” என்றே இளம்பூரண அடிகள் பாடங்கொண்டிருப்பதும் இதனை வலியுறுத்தும். “வைகுறு விடியல்” என்பதில் எண்ணும்மை சூத்திரச்செறிவு நோக்கித் தொக்கது. இனி, ‘வைகுறு விடியல்’ என்ற தொடரை வைகுறுதலாகிய விடியல் எனக்கொண்டு பொழுதுபுலர்தற்கு முற்பட்ட இறுதியிரவுக்காலத்தையே குறிக்குமென்றும், எற்பாடு என்பது சுடரெழுந்து வெயிலெறிக்கும் காலைப்பொழுதைக் குறிக்குமென்றும் ஆசிரியர் சிவஞான முனிவர் தம் முதற்சூத்திரவிருத்தியில் கூறுகின்றார். வைகறையும் விடியலும் ஒருபொருட் கிளவிகள் என்னுமவர் கொள்கை பண்டைத் தமிழ்ப்புலவர்க் குடன்பா டன்றென்பது பழைய தொகைநூல்களில் பலவிடங்களிலும் பயின்றுவரும் குறிப்புக்களால் தெளியப்படும். வைகறையும் விடியலும் முன்னும் பின்னுமாக வரும் இருவேறு சிறுபொழுதுகளே யென்பது மதுரைக்காஞ்சி யடிகளாலினிதுவிளங்கும். “. . . . . . . . . . இல்லோர் நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப் புலர்ந்துவிடி விடியல் எய்த (662, 663, 664) என்ற அடிகளில் “இருள் மாய்ந்து கதிர்விரியும்”, காலையை விடியலென்றும், பிறகு “இரவுத்தலைப்பெயரும் ஏமவைகறை” என்று அதேபாட்டில் 686ஆம் வரியில் வைகறையை விடியலினின்றும் வேறுபிரித்து அது இரவுத்தலைப்பெயரும் ஏமஞ்செய் காலமென்றும், மாங்குடிமருதனார்கூறுதலால் அது வலிபெறுவதாகும். அன்றியும் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் தாம்பாடிய மலைபடுகடாத்தில், “வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப் பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீர” எனும் 171, 172, 173ஆவது அடிகளில் வைகறைப் பொழுதைக் கூறி, பிறகு அடி 195, 196இல் |