பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை171

சொன்ன வாயுளே யொருவன் புட்குரன்
முன்னங் கூறினான் முழுது ணர்வினான். ”

(சிந்தாமணி, 415)

 
 “. . . . . . . . . . . . . .
  நல்வேய்தெரிகானவன் புள்வாய்ப்புச் சொன்னகணி
 
(வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்)
  வேற்றூர்க் கட்சியுட்காரி கடியகுரலிசைத்துக் காட்டும்
  போலும், . . . . . . மறவன் கைவில் ஏந்திப்புள்ளும்
  வழிப்படர . . . . புல்லார் நிரைகருதிப் போகும். ”
 
(வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்)
 

புடைகெடப் போகிய செலவு = பக்கத்து இடமில்லையாம்படி படை பரந்துசெல்லுதல்;

“வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியர்
 செவ்வானம் செல்வதுபோற் செல்கின்றார் - எவ்வாயும்
 ஆர்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ
 போர்க்குந் துடியொடு புக்கு. ”

(பெரும்பொருள் விளக்கம்: புறத்திரட்டு, 1236)

புடைகெட ஒற்றின் ஆகிய வேயே = வேற்றுப்புலத்து இருதிறத்தும் ஒற்றறிய இடமில்லையாம்படி ஒற்றரால் அறிந்த உளவு:

“ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங்
 கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர
 வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு
 கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு. ”

(பழம்பாட்டு)

தம் மொற்றர் இனி யறிய இடமில்லாதாயிற்று, அவர் முற்றும் ஒற்றி முடிந்ததனால் பிறர் ஒற்ற இடமில்லையாயிற்று, அவரறியாவாறு தம் மொற்றர் மறைவில் ஒற்றிய திறப்பாட்டினால்.

வேய்ப்புற முற்றின் ஆகிய புறத்திறை = உளவறிந்த சூழலை வளைத்து அற்றநோக்கி அடங்கியிருத்தல்.

“கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும்
 பரந்துசெல் மள்ளர் பதிந்தார் - அரந்தை