172 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி எரிந்தவியும் போலுமிவ் வூர். ” (பதிதல் = அமைதியாகத் தங்குதல். அரந்தை = துன்பம்). முற்றிய வூர்கொலை = வளைந்துகொண்ட நிரை மீட்கப் பொருவாரைக் கோறல்; (ஊர் மீட்கப் பொரும் ஊரவர்க்கு ஆகு பெயர்). “சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண் டிகலுழந்த வல்வில் லிளையோர்புண் டீரத் துகளெழுங்கொல் பல்லான் றொழு. ” (பழம்பாட்டு) ஆகோள் = ஆனிரை கொள்ளுதல்; “. . . . . . . . . . . . . . . . . . . . புல்லா ரினநிரை செல்புற னோக்கிக் கையிற் சுட்டிப் பையென எண்ணிச் சிலையின் மாற்றி யோனே. (புறம். 257) ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய். ” (புறம். 259) எனும் புறப்பாட்டடிகளும் நிரை கொண்டோர் நிலையே கூறும். பூசல் மாற்று = நிரைகொண்டு மீள்வோர் மீட்போரால் நேரும் பூசலை விலக்குதல்; “ஒத்த வயவ ரொருங்கவிய நாண்படரத் தத்த மொலியுந் தவிர்ந்தன - வைத்தகன்றார் தம்பூசல் மாற்றி நிரைகொள்வான் றாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில். ” (பழம்பாட்டு) போர் இன்றி நிரைகொள்வதே நோக்காதலின், போர் என்னாது பூசல் எனப்பட்டது. பூசல் - போரின்முன் நிகழும் |