தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 173 |
ஆர்ப்பு. போராய் வளருமுன் அதனைத் தடுத்து விலக்கல் வெட்சியார் வினையாதலின், பூசல் மாற்றெனப்பட்டது. நோயின் றுய்த்தல் = பற்றிய நிரை வருந்தாவாறு கொண்டுசெலுத்தல்; “. . . . . . . . . . . . . . . . . . முல்லை வகுந்திற் போகிப் புல்லருந்திக் கான்யாற்றுத் தெண்ணீர் பருகிக் காமுறக் கன்றுபா லருந்துபு சென்றன மாதோ . . . . . . . . கவைஇய நிரையே. ” (ஆசிரியமாலை - புறத்திரட்டு, 1242) நுவல்வழித்தோற்றம் = தம்மவர் புகழும்படி நிரை கொண்டார் மீளும் பொலிவு: “. . . . . . . . . . . . . . ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று நிரையொடு வரூஉ மென் ஐக்கு உழையோர், தன்னினும் பெருஞ்சா யலரே. ” (புறம் 262, மதுரைப் பேராலவாயார்) தந்து நிறை = கொண்ட நிரையைத் தமதிடத்துக் கொணர்ந்து நிறுத்தல்: “கயமலர் உண்கண்ணாய் காணாய் நின்ஐயர், அயலூர் அலர எறிந்தநல் ஆனிரைகள் நயனின் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன. ” (வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்) “குளிறுகுரன் முரசங் கோட்டின் வெரூஉங் களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான மெல்லாம் பெறுக விடம். ” (பழம்பாட்டு) பாதீடு = நிரை கொண்டோர் பரிசில் தம்முட் பங்கிடுதல்; “நேரார் புலத்து நிரையைக் கவர்ந்தெதிர்த்த போரார் மறவர் புறங்கண்டு - பாராளும் |