பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை189

கருத்து : இது, வஞ்சிப்புறத்திணை முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனாம், என்கின்றது.

பொருள் : வெளிப்படை.

குறிப்பு : முதலேகாரம் பிரிநிலை, புறத்திணை ஏழனுள் வஞ்சியைப் பிரித்தலின், ஈற்றேகாரம் இசைநிறை; அசை எனினும் அமையும்.

(1)  அகத்தில் தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் அல்லது வினைமேற் செல்வதுபோல, வஞ்சித் தலைவனும் தலைவியைப் பிரிந்து பகைமேற் செல்லுதலானும், (2) முல்லையிலும் வஞ்சியிலும் தலைவரைப் பிரிந்த தலைவியர் தனிமை தாங்காது வருந்திக் கற்பறம் பேணி யிருப்பது பொது ஒழுக்கமாதலானும், (3) முல்லைத் தலைவர் தம் புலம்புறு தலைவியரைப் பிரிந்து செலவு மேற்கொள்வது மனையறம் பேணும் கடனிறுக்கும் பொருட்டாதல் போலவே, வஞ்சித் தலைவர் மேற்செலவும் ஆண்மையறம் பேணும் பொருட்டாதலானும், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று.

சூத்திரம் : 7 
 எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்று.

கருத்து : இது, முல்லைக்குப் புறன் என்ற வஞ்சித் திணையின் இயல்பை விளக்குகின்றது.

பொருள் : எஞ்சா மண்ணசை வேந்தனை = தணியாத பிறர்மண் ஆசை யுடைய ஒருவேந்தனை; வேந்தன் = (அறமறமுடைய) பிறிதொரு மன்னன்; அஞ்சுதகத் தலைச் சென்று = அவன் வஞ்ச நெஞ்சம் அஞ்சுமாறு தானே (படையொடு) மேற் சென்று; அடல் குறித்தன்று = வென்றடக்குதலைச் சுட்டும் அளவிற்று வஞ்சித்திணை.

குறிப்பு : இச்சூத்திரத்திற்கு முன்னுரைகாரர் வேறு வகையாய்ப் பொருள் கூறுவர். அவர் உரை வருமாறு : ‘எஞ்சா மண்ணசை = இரு பெரு வேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே, அஞ்சு தகத்தலைச்சென்று =