24 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
“ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்” எனும் குறளால் ஊடுமிடத்தெல்லாம் கூடுதலின்றியமையாமை பெறுதற்கில்லை. ‘கூடிமுயங்கப்பெறின்’ அதற்கின்பம் எனவள்ளுவர் விதந்து கூறுதலாலேயே, ஊடுந்தொறும் உடனே கூடல் ஒருதலையாகாது, கூடப்பெறாப் பொழுதுகளும் உளவாதல் இயல்பென்பது பெறப்படும். அன்றியும், ஊடல், அதன்பின் கூடநேர்ந்துழி, அக்கூட்டத்திற்கு இன்பம் மிகுக்கும் என்பது இக்குறட்பொருள் ஆவதன்றி, உடனே கூட நேராப்பொழுதெல்லாம் ஊடல் நிகழாது என்பது கருத்தாகாமை வெளிப்படை இனி, “காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ்சு யாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்” எனும் அள்ளூர் நன்முல்லையாரின் குறுந்தொகைப் பாட்டில் காலையும் விடியலும் வேறாக்கி விரிகதிர் விடியலைக் காலையென்றபின் வைகறையை விடியலென்று கூறியதனால், வைகறையின் வேறுபட்ட விரிகதிர் விடியலும் பகலிறுதியின் எற்பாடும் உண்டெனப் பண்டைப் புலவரின் பல பாட்டுக்கள் கூறுவதை மறுக்கவொண்ணாது. அதுவேபோல் அப்பாட்டில் எற்பாடு கூறப்பெறாமை கொண்டு ‘பகல் மாயந்திப்படுசுடர்ப்பொழுதான எற்பாடு இல்லையெனலும் இயலாது. கூறப்பட்டதொன்று உண்டெனலாமன்றிக் கூறப்பெறாமைகொண்டு உள்ளதொன்றை இல்லையெனத் துணிதற்கு அளவைநூ லிடந்தராது. மேலும், இப்பாட்டினடிகளில் சொற்றொறும் வருகின்ற உம்மை எண்ணும்மையேயாகும். ‘என்று இப்பொழுதைந்தும்’ என முற்றும்மை பெறாமையானும் சிறுபொழுதைந்தேயாம் என்னுமுடிவிற்கு இக்குறுந்தொகைப் பாட்டடிகள் இடந்தராவாம். எவ்வாற்றானும் பண்டைச் சான்றோர் பாட்டுப் பலவற்றுள்ளும் வைகறையும் விடியலும் இருவேறு சிறுபொழுதுகளாமென விதந்து கூறப்பெற்றிருத்தலானும், இச்சூத்திரத்தில் வைகறையையும் விடியலையும் கூறி அவற்றின் வேறாய எற்பாடும் கூறப்பெறுதலானும், இரவுக்குச் சிறுபொழுது மூன்றாவதுபோல் பகலுக்கும் மூவேறு சிறுபொழுது |