தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 289 |
யணங்குசா லடுக்கம் பொழியுநு மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே” - புறம். 151 இதில், ஈயா விச்சிக்கோவை யிகழ்ந்து ஈயும் கண்டீரக் கோவைப் புகழ்வதறிக. “இரவலர்ப்புரவலை நீயுமல்லை” என வெளிமானைப்பழித்த இளஞ் சித்திரனார் புறப்பாட்டும் (162), “ஒல்லுவதொல்லும்” என்று நன்மாறனைப் பழித்த மூலங்கிழார் புறப்பாட்டும் (196) இவ்வகையின. பொருள் : (3) அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும் = நெருங்கிப் பொருந்திப் புகழும் இயன்மொழி வாழ்த்தென்னும் துறையும்; குறிப்பு : உள்ளசால் புரைப்பது இயன்மொழி, பிற்காலத்திது மெய்க்கீர்த்தி எனப்பட்டது. இதற்குச் செய்யுள் : அ. | “ஒன்று நன்குடைய பிறர்குன்றம். என்றும் இரண்டு நன்குடைத்தே கொண்பெருங் கானம்; நச்சிச் சென்ற விரவலர்ச் சுட்டித் தொடுத்துணக் கிடப்பினுங் கிடக்கும், அஃதான்று நிறையருந் தானை வேந்தரைத் திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே” | | - புறம். 156 |
இன்னும், “குறத்தி மாட்டிய” எனும் கபிலர் புறப்பாட்டும் (108) பாரியை அவரடுத்தூர்ந்தேத்தியதாம். ஆ. | “இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்; பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்றவன் கைவண் மையே” | | - புறம். 134 |
|