பக்கம் எண் :

290நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

பொருள் : (4) சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க்குரைத்த கடைநிலை யானும் = நெடுந்தொலை வழி நடந்த வருத்தம் நீங்கப் புரவலர் தலைக்கடைக் காவலரிடம் இரவலர் கூறும் கடைநிலையும்;

குறிப்பு : இதில், “ஆன்” அசை. இதற்குச் செய்யுள் :

“வாயி லோயே! வாயி லோயே!
 வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
 உள்ளியது முடிக்கு முரணுடை யுள்ளத்து
 வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
 பரிசிலர்க் கடையா வாயி லோயே!
 கடுமான் றோன்றல் நெடுமா னஞ்சி
 தன்னறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
 அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென
 வறுந்தலை யுலகமு மன்றே; அதனாற்
 காவினெங் கலனே, சுருக்கினெங் கலப்பை,
 மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
 மழுவுடைக் காட்டகத் தற்றே,
 எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”

- புறம். 206

பொருள் : (5) கண்படை கண்ணிய கண்படை நிலையும் = இரவலன் உறக்கங் கருதிக்கூறும் “கண்படை நிலை” எனுந்துறையும்;

அதற்குச் செய்யுள் :

“வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னி!நின்
 ஓவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர்,
 களிறுகவர் முயற்சியிற் பெரிதுவருந்தினரே;
 உலகங் காவலர் பலர்விழித் திருப்ப
 வறிது துயில்கோடல் வேண்டுநின்
 பரிசில் மாக்களும் துயில்கமா சிறிதே. ”

(நச். உரைமேற்கோள்)

பொருள் : (6) கபிலைகண்ணிய வேள்வி நிலையும் = கபிலைநிறஞ்சிறந்த ஆவைக்கருதிய வேள்வி நிலையும்;