364 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
அமைதற் கமைந்தநங் காதலர் அமைவில ராகுதல் நோமென் னெஞ்சே” (குறுந். 4) இன்னும், “இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள் ஆய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே” (அகம். 52) என்பதுமது. அச்சத்தி னகறற்குச் செய்யுள்: “அலர்யாங் கொழிவ தோழி! பெருங்கடற் புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர் யான்கண் டனனோ விலனோ, பானாள் ஓங்கல் வெண்மணற் றாழ்ந்த புன்னைத் தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆய மெல்லாம் உடன்கண் டன்றே” (குறுந். 311) “. . . . . . . . . . . . . இனமீன் இருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி, இவடன் மடனுடை மையின் உயங்கும், யானது கவைமக நஞ்சுண் டாஅங் கஞ்சுவல் பெரும!என் நெஞ்சத் தானே” (குறுந். 324) என்பதுமது. “. . . . . . . . . . . . . . . அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும் வாரற்க தில்ல தோழி! சாரற் பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலம்பும் சோலை இலங்குமலை நாடன் இரவி னானே” (குறுந். 360) என வருவதுமது. |