தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 365 |
அவன் புணர்வுமறுத்தற்குச் செய்யுள்: “. . . . . . . . . . . . . பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு வாரல், வாழியர், ஐய!எந் தெருவே” (குறுந். 139) “. . . . . . . . . . . . . நல்வரை நாட! நீவரின் மெல்லிய லோரும் தான்வா ழலளே” (அகம். 12) என்பதுமது. தூது முனிவின்மைக்குச் செய்யுள். “. . . . . . . . . . . . . . . . . . காஞ்சி யூரன் கொடுமை கரந்தன ளாகலின் நாணிய வருமே”(குறுந். 10) “கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் நின்னூர் நெய்தல் அனையேம், பெரும! நீயெமக் கின்னா தன்பல செய்யினும் நின்னின் றமைதல் வல்லா மாறே” (குறுந். 309) இச் செய்யுட்களில் தணந்த தலைவன் தூதைத் தலைவி முனியாமையும், “இன்ன னாயினள் நன்னுதல் என்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி” (குறுந். 98) என்னும் செய்யுளில் தணந்துறையும் தலைவனுக்குத் தலைவி தூதுய்ப்பதை முனியாமையும் கண்டு தெளிக. துஞ்சிச் சேர்தலாவது, வரைவுநீட்டுந் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமாழ்கல். சோர்தல் என்னாது சேர்தல் என்றதானும், துஞ்சலும் மடிமையு முன் “ஆங்கவை ஒருபாலாக” |