366 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
எனும் சூத்திரத்துத் தனி வேறு கூறப்படுவதானும், இங்கு இத்தொடர் வாளா மடிந்து மனை வைகுதலைச் சுட்டாமல், வரையாதொழுகுந் தலைவன் வரவு மகிழாது அவன் ஒழுக்கினுக்கு மாழ்கிப் பொலிவழி தலைவியின் மெலிவைக் குறிக்கும். ‘துஞ்சல்’ மடிமையாகாமை, “நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்” என்று அவை வெவ்வேறு கூறப்பெறுதலானு மறிக. இதுவே பேராசிரியர்க்கும் கருத்தாதல், “வேண்டியவாறு கூட்டம் நிகழப்பெறாமையின், தலைமகனொடு புலந்தாள் போல மடிந்தொன்றுமாதலின்” என்னு மவர் உரைக்குறிப்பால் உணர்க. இனி, “இஃது உரிமை பூண்டமையால் உறக்கம் நிகழ்தலாமாறும்” எனும் இளம்பூரணர் கூற்றுப் பொருந்தாமை தேற்றம். இவ்வாறு துஞ்சிச்சேரு முளநிலையை. “. . . . . . . . . . . கடவுள் நண்ணிய பாலோர் போல ஓரீஇ யொழுகும் என்னைக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே”. (குறுந். 203) என்பதில் ‘முன் தலைவற்குப் பரிந்தேன்; அது கழிந்தது’ எனத் தலைவி கூறுங் குறிப்பானும் காண்க. காதல் கைம்மிகலுக்குச் செய்யுள்: “. . . . . . . . . . . . . . . . . . ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் அகலினும் அகலா தாகி இகலுந் தோழிநங் காமத்துப் பகையே” (குறுந். 257) “உள்ளின் உள்ளம் வேமே, யுள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே, வருத்தி வான்றோய் வற்றே காமம், சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே” (குறுந். 102) என்பதுமது. “கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல்” (குறள். 1293) |