தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 367 |
“நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம மறையிறந்து மன்று படும்” (குறள். 1254) என வரும் பாக்களும் காதல் கைம்மிகல் காட்டி நின்றன. கட்டுரையின்மை: “கையி னாற்சொலக், கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்” (சிந்தா. 997) எனும் குணமாலைகூற்றில், கழிகாதலால் உரையறுதல் காண்க. இன்னும், “. . . . . . . . . . . துறைவன் குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன் றறியாற் குரைப்பலோ யானே” (குறுந். 318) எனவும், “மெல்லிய விளிய மேவரு தகுந இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ மறத்தியோ வாழியென் னெஞ்சே” (குறுந். 306) எனவும் வருவனவற்றிலும் தலைவி உரையறும் குறிப்பறிக. சூத்திரம் : 24 | | | தெய்வம் அஞ்சல், புரையறந் தெளிதல் இல்லது காய்தல், உள்ள துவர்த்தல், புணர்ந்துழி யுண்மைப் பொழுதுமறுப் பாக்கம், அருள்மிக வுடைமை, அன்புதொக நிற்றல், பிரிவாற் றாமை, மறைந்தவை யுரைத்தல், புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்தும் செப்பிய பொருளே. |
கருத்து : இது வரைந்துடன் வாழும் கற்புக் காதலுக்குரிய மெய்ப்பாடுகள் கூறுகின்றது. |