பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை449

மீட்டும் கூறுவதாகக் கொள்ளுதல் பொருந்தாது. மேலுமிச்சூத்திரம் கலியிலக்கணப்பகுதியின் முதற் சூத்திரமாதலானும் இதில் கலியன்றி ஆசிரிய உறுப்பை இங்குக் கூறற்கில்லை. இவருரையிற் குறைவு இவ்வளவே. மற்றிருவர் போலாது இச்சூத்திரம் சீர்குறைந்த அடியைக் குறியாமல் நேரடிபயிலும் பாவுறுப்புக்களையே சுட்டும் நோக்குடையதென இளம்பூரணர் கண்டு கூறினது பாராட்டத்தக்கது.

இனி, இச்சூத்திரம் நுதலும் நேரிய பொருள் தெளிதலெளிதாகும். இதற்கு முன்னெல்லாம் பிறபாவகை யிலக்கணங்கூறி முடித்து ஆசிரியர் இது முதல் 156ஆவது சூத்திரம் வரை கலியிலக்கணம் வகுத்துச் செல்லுவதால், இதில் வரும் பகுதி யெல்லாம் கலியுறுப்புக்களாகவே கருதப்படல் வேண்டும்; முதலுமிறுதியுமான ஒத்தாழிசையும் குட்டமும் (தரவும்) கலியுறுப்புக்களாகலான், இடைநிற்கும் மண்டிலயாப்பு மட்டும் கலியல்லாத ஆசிரியமாகக் கருதுதல் பொருந்தாது. அதுவும் கலியுறுப்பாதலே அமைவுடைத்தாம்.

(i)  இச்சூத்திரங் கூறு மூன்றனுள் முதல் நிற்கும் ‘ஒத்தாழிசை’ ‘கலி நால்வகை’ யுளொன்றான கலிப்பாவன்று; கலிப்பாவகைகளில் வரும் ஒத்து மூன்றியலும் தாழிசையுறுப்பேயாகும். (செய். சூ. 142). இவ்வாறன்றி, ஒத்தாழிசைக் கலிப்பாவையே குறிப்பதாகக் கொள்ளின் அப்பா முழுதும் அப்பாவுறுப்புக்களனைத்தும் நேரடி கொள்ளுமென்ற நியதியில்லாமையால், நாற்சீரடி கொண்டு நடக்கும் தாழிசையுறுப்பு மட்டுமே ‘இங்குச் சுட்டப்பட்ட தென்பதே பொருந்துவதாம்.

(ii)   இறுதி நிற்கும் ‘குட்டம்’ என்பது கலியுறுப்பான தரவாகும். “குட்டம் எனினும் தரவெனினும் ஒக்கும்” என்று இளம்பூரணர் இச்சூத்திரவுரையில் கூறுதல் கவனிக்கத்தக்கது.

(iii)   இனி இவற்றினிடை நிற்கும் மண்டிலயாப்பும் அடைவே ‘அராக’மென்னுங் கலியுறுப்பே யாதல் வேண்டும்.

‘அராகம்’ என்பது “அறாது கடுகிச்சேறல்” என்று பேராசிரியர் ‘எருத்தே கொச்சக‘மென்னும் செய்யுளியல் 152ஆவது சூத்திர உரையில் விளக்கியுள்ளார்.