450 | ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
உருண்டோடும் நடையுடைமை அராக வியல்பு. “உருட்டு வண்ண மராகந் தொடுக்கும்” என்பர் ஆசிரியர் தொல்காப்பியனாரும்(செய். 232). இனி, ‘மண்டிலம்’ என்பது ‘வட்டமாயோடல்’ அல்லது ‘உருண்டோடல்’ எனும் பொருட்டாம். (2, 3 பிங்கலம் 3919) (மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி 3 ஆம் தொகுதி பக்கம் 1601) புறநானூற்றுச் செய்யுள். 30இல் ‘பரிப்புச் சூழ்ந்த மண்டிலம்’ என்றும், புறப்பொருள் வெண்பாமாலை, வென்றிப்படலத்தில் “செலவொடு மண்டிலம் சென்று” என்றும், வருதலுங்காண்க. ஆகவே, மண்டலித்து அறாது உருண்டோடும் இயல்புடைய அராகமே மண்டிலயாப்பெனச் சுட்டப் பெறுவது அமைவுடைத்தாகும். இனி, இச்சூத்திரப் பொருள் வருமாறு. ஒத்தாழிசை, அராகம், தரவு என்ற மூன்று கலியுறுப்புக்களும் நாற்சீரடியான நேரடி பொருந்தி வருவனவாம் என்று புலவர் கூறுவர். இனி இப்பொருளே இதையடுத்து வரும் இரண்டு செய்யுளியற் சூத்திரங்களுக்கு மியைபுடையதாகும் என்பதை அவ்வச்சூத்திரப் பொருளாராய்வுழிக் காட்டுவன். சூத்திரம் : 116 | | | குட்டம் எருத்தடின யுடைத்து மாகும். |
“தரவில் ஈற்றயலடி குறைந்து வரும்” என்பதே இதன் பொருளென உரையாசிரியரும் பேராசிரியருங் கூறுவர். இனி, நச்சினார்க்கினியரோ இதில் ‘எருத்தை’த் தரவென்றும் குட்டத்தைக் குறைந்த அடியென்றும் தாம் மேற் சூத்திரத்தில் கொண்டபடியே ஈண்டும் கூறித் “தரவினது ஈற்றடி குறைந்து வருதலை யுடைத்தாம்” என்று இங்குப் பொருள் கூறினர். ‘எருத்து’ எனுஞ் சொல் ஈற்றயலடிக்காதல், தரவுக்காதல் பெயராகும். நச்சினார்க்கினியர் இங்கு ‘எருத்தை’த் தரவெனக் கொண்ட நிலையில், இச்சூத்திரத்தில், அவர் தரும் பொருளுக்கு |