பக்கம் எண் :

502நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

1955பிப்ரவரி 9 - அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி
 விழாவில் ‘முனைவர்’ (டாக்டர்) பட்டம்.
 
1955பிப்ரவரி 28 - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
 பொன்னாடை போர்த்தல்
 
1956சூன் 3 - மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா 5ஆம்
 நாள் விழாவின் இயலரங்குத் தலைவர்
 
1957சூன் 22 - சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘கேடயம்’ வழங்கல்
 
1958திசம்பர் 14 - பசுமலையில் தமிழகப் புலவர் குழு அமைப்புக் கூட்டம்;
 குழுவின் தலைவர்
1959சூலை 27 - மதுரையில் ‘எண்பதாம் ஆண்டு நிறைவு விழா’ - பாராட்டு
 
1959அக்டோபர் 4 - மதுரையில் தமிழகப் புலவர் குழுவும்,
 மதுரை நகரவையும் பாராட்டுதல்
 
1959நவம்பர் 8 - மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாவில் தொடக்க உரை
 [நாவலர் கலந்து கொண்ட இறுதிக் கூட்டம்]
1959திசம்பர் 2 - பசுமலையில் தமது இல்லத்தில் மயக்கமுற்று விழுதல்
 
1959திசம்பர் 4 - மதுரை அரசினர் பெரு மருத்துவமனை செல்லல்
 
1959திசம்பர் 7 - நினைவிழத்தல்
 
1959திசம்பர் 14 - இறைவனடி சேரல் [இரவு 8. 40 மணி]
 
1959திசம்பர் 15 - பசுமலையில் உடலுக்கு எரியூட்டல் [மாலை 6 மணி]
 
1959டிசம்பர் 15 - இறுதிக் கடனிகழ்ச்சி - ‘முத்தமிழ்க் காவலர்’
 கி. ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட பல அறிஞர்களின் சொற்பொழிவு,  
 ஏழைகளுக்கு உணவளித்தல்
1963‘நாவலர் சோமசுந்தர பாரதியார் கல்வி அறப்பணிக்குழு’ தோற்றுவித்தல்