2

1. மருதம் ( 1 )
(
) வேட்கைப் பத்து


2. வாழி யாதன் வாழி யவினி
விளைக வயலே வருக விரவலர்
எனவேட் டோளே யாயே யாமே
பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும்
தண்டுறை யூரன் கேண்மை
1வழிவழிச் சிறக்க வெனவேட் டேமே..

இதுவுமது..

(ப-ரை.) தலைவி இல்லறமே நினைந்து ஒழுகினாள்; யாங்கள்
நின் காதல் அவள்மேற் சுருங்குகின்ற திறம் நோக்கி, ‘நின்
கேண்மை வழி வழிச்சிறக்க’ என விரும்பினேம் எ-று.

சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல்
நிகர்க்கும் ஊரனென்றது குலமகளிருடனே பொதுமகளிர் இகலு
மூரன் எ-று.

குறிப்பு, நெய்தல் - ஒருவகை நீர்ப்பூ , நிகர்க்கும் - ஒப்பாகும், நீலத்
தினும் நெய்தல் இழிந்தது ; நாலடி. 236. கேண்மை - நட்பு. . வழிவழிச்
சிறக்க - நாள் தோறும் பெருகுக.'
வழிவழிச் சிறக்கநின் வலம்படு
கொற்றம்” ( மதுரைக். 194 )

(பி -ம்) 1‘வழிவழி சிறக்க’ ( 2 )