(ப-ரை.) தலைவி இல்லறமே நினைந்து ஒழுகினாள் : ‘அவன்
பொதுமனையில் வாழ்க்கையொழிந்து தன் மனையிலே வாழ்வானாக,
என வேட்டேம் யாங்கள் எ-று.
மேல் விளைதற்கு வித்திய உழவர் முன்பு விளைந்த செறுவின்
நெல்லோடு பெயருமென்றது பின்வரும் பரத்தையர்க்கு வருவாய்
பண்ணி அக்காலத்து உளராகிய பரத்தையரோடு இன்பம் நுகர்வா
னென்பதாம்.
குறிப்பு. பால் பல ஊறுக-பசுக்கள் பால் பெரிதும் மிகுக; ?என்
பாராட்டைப் பாலோ சில ? (கலித். 85:33) என்பதிற் சிலவென்பது
சிறிதென்னும் பொருளில் வந்ததுபோல இங்கே பல என்பது மிகுதி
யென்னும் பொருளில் வந்தது. பகடு-உழும் எருதுகள். வித்திய-
விதைத்த. பூ கஞல்-பலவகைப் பூக்கள் நெருங்கிய. பூக்கஞலுாரன்:
ஐங், 8 : 5, 16 : 3, 99 : 3; சிறுபாண், 108, தன்மனை வாழ்க்கை-தன்
வீட்டின்கண்ணே வாழ்தல்.
பொது மனை-பரத்தையர் வீடு. செறு-வயல்.
(பி.ம்), 1‘பேரும்? ( 3 )