4

1. மருதம் ( 1 )
(
) வேட்கைப் பத்து


4. வாழி யாதன் வாழி யவினி
  பகைவர்புல் லார்க பார்ப்பா ரோதுக
  எனவேட் டோளே யாயே யாமே
  பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
  கழனி யூரன் மார்பு
  பழன மாகற்க வெனவேட் டேமே.

 இதுவுமது.

 

  (ப-ரை) இவள் இல்லறமே விரும்பி ஒழுகினால் ; ‘அவன்
மார்பு ஊரவர்க்கெல்லாம் பொதுவாகிய பழனம்போலாது இவட்கே
யுரித்தாக’ என விரும்பினேம் யாங்கள் எ-று.

  பூத்துப் பயன்படாக் கரும்பினையும் காய்த்துப் பயன்படும் நெல்லி
னையு முடைய ஊரனென்றது ஈன்று பயன்படாப் பொது மகளிரையும்
மகப் பயந்து பயன்படும் குலமகளிரையும் ஒப்ப நினைப்பான் எ-று,

  குறிப்பு. பகைவர் புல் ஆர்க-பகைவர் தோல்வியுற்றுப் புல்லைப்
பறித்து உண்ணுக; புல்லார்தல் தோல்விக் குறிப்பு : “புன்மேய்வார்”
(சிறுபஞ்ச. 41); வி.பா. 9-ம் போர் 5, 12-ம் போர். 12. ஓதுக-
வேதத்தை ஓதுக. காய்த்த-விளைந்து முதிர்ந்த. மருதநிலக் கருப்
பொருள்களுட் சிறந்தமை பற்றிக் கரும்பும் நெல்லும் கூறப்பட்டன;
“நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும்” (நான்மணி. 9). பழனம்
ஊரார்க்குப் பொதுவாகிய இடம். ஆகற்க-ஆகாதொழிக.
   ( பி-ம் ) 1‘பகையர்’                                          ( 4 )