6

1. மருதம் ( 1 )
(
) வேட்கைப் பத்து


6. வாழி யாதன் வாழி யவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுறை யூரன் வரைக
எந்தையும் கொடுக்க வெனவேட் டேமே.

எ-து களவினிற் பலநாளொழுகி வந்து வரைந்துகொண்ட
தலைமகன் தோழியோடு சொல்லாடி, ‘யான் வரையாது ஒழுகுகின்ற
நாள் 1நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?’ என்றாற்கு அவள்
சொல்லியது.

(ப-ரை) நின்னை எதிர்ப்பட்டவன்றே நீ வரைந்தாயெனக் கொண்டு
இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகியதல்லது தலைவி பிறி
தொன்றும் நினைத்திலள்; யாங்கள், ‘அகன்ற பொய்கைக்கு அணி
யாகத் தாமரையையுடைய ஊரனாதலால், அத்தண்டுறையூரன்
மனைக்கு அணியாம்வண்ணம் இவளை வரைவானாக; எந்தையும்
கொடுப்பானாக’ என விரும்பினேம் எ-று.

ஈண்டுத் தலைவியை யாயென்றது எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப்
பூண்டொழுகுகின்ற சிறப்பை நோக்கி.

குறிப்பு. யாண்டு பல நந்துக-அரசனுடைய வருடங்கள் பல
பெருகுக; “ஆயிர வெள்ளம் வாழிய பலவே” (பதிற்,21), மலர்ந்த
பொய்கை - அகன்ற பொய்கை. முகைதல்-அரும்புதல்; குறுந். 186;
அகநா, 177. வரைக-மணம் செய்துகொள்க. பாங்கி தலைவியின்
தந்தையை எந்தை என்றாள், தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமை
பற்றி; குறுந். 51 : 4-5; “எந்தை தன்னுள்ளம்” (கலித். 61)

இழைத்திருந்த-செய்துகொண்டிருந்த. பொய்கைக்கு அணி
தாமரை: “குளத்துக் கணியென்ப தாமரை” (நான்மணி. 9.)

(மேற்.) மு. ‘களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத
தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம்
அதனை முடித்தலின் அப்பரவுக்கடன் கொடுத்தல் வேண்டும் எனத்
தலைவற்குக் கூறுமிடத்துத் தோழிக்குக் கூற்று நிகழும்’ என்பத
னுள் ‘கிழவோற் சுட்டிய’ எனப் பாடங்கொண்டு மேற்கோள் காட்
டுவர் (தொல். கற்பு. 9, ளம்..)

(பி-ம்) 1‘நீயிர் நினைத்திருந்த திறம்’